என் காசுல லியோ படத்தை எடுத்துட்டு!.. என்னையே குறை சொல்றியா.. லலித்தை விளாசிய திருப்பூர் சுப்பிரமணியன்!..

நடிகர் விஜய் படங்கள் வெளியாகும் போதெல்லாம் பிரச்சனைகளும் சிக்கல்களும் வந்து கொண்டே இருப்பது வாடிக்கையாகி விட்ட நிலையில், லியோ படத்துக்கு பிரச்சனை ஓவர்டோஸாக ரிலீசுக்கு பிறகும் நடிகர் விஜய்யை சும்மா சுத்தி சுத்தி அடித்து வருகிறது. திருப்பூர் சுப்பிரமணியம் யூடியூப் சேனல்களில் உட்கார்ந்து கொண்டு லியோ படத்துக்கு எதிராகவும் லியோ வசூலுக்கு எதிராகவும் பேசியது எல்லாமே பொய் என்றும் கோயமுத்தூரில் லியோ படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை திருப்பூர் சுப்பிரமணியன் கேட்டு நான் கொடுக்கவில்லை. அதனால் தான் […]

By :  Saranya M
Update: 2023-10-29 09:00 GMT

நடிகர் விஜய் படங்கள் வெளியாகும் போதெல்லாம் பிரச்சனைகளும் சிக்கல்களும் வந்து கொண்டே இருப்பது வாடிக்கையாகி விட்ட நிலையில், லியோ படத்துக்கு பிரச்சனை ஓவர்டோஸாக ரிலீசுக்கு பிறகும் நடிகர் விஜய்யை சும்மா சுத்தி சுத்தி அடித்து வருகிறது.

திருப்பூர் சுப்பிரமணியம் யூடியூப் சேனல்களில் உட்கார்ந்து கொண்டு லியோ படத்துக்கு எதிராகவும் லியோ வசூலுக்கு எதிராகவும் பேசியது எல்லாமே பொய் என்றும் கோயமுத்தூரில் லியோ படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை திருப்பூர் சுப்பிரமணியன் கேட்டு நான் கொடுக்கவில்லை. அதனால் தான் அவர் அப்படி பொய் சொல்றாரு என லலித் குமார் பேட்டி கொடுத்த நிலையில், அந்த பேட்டிக்கு தற்போது தனியார் தொலைக்காட்சியில் வெளிப்படையாக பதிலடி கொடுத்துள்ளார் திருப்பூர் சுப்பிரமணியன்.

இதையும் படிங்க: கௌதம் மேனன் எப்படி சார்… யோஹன் திரைப்படம் நடக்காமல் போனதுக்கு இது தான் காரணமா..?

லியோ படம் தயாரிக்க லலித் குமாருக்கு அவ்வப்போது பணம் தேவைப்படும் போதெல்லாம் தான் எந்தவொரு பிணையும் இன்றி அவர் கேட்ட நேரத்திற்கு பணம் கொடுத்துள்ளேன் என்றும், அதற்கு அவர் சரியாக வட்டி கூட தரவில்லை என்றாலும், பரவாயில்லை என பெரிய மனசு பண்ணி விட்டுள்ளேன். ஆனால், இப்போ என்னை பற்றியே அவதூறு பரப்ப லலித் குமார் தொடங்கிய நிலையில், அவர் பண்ண மோசடி வேலையெல்லாம் அம்பலப்படுத்தப் போகிறேன் என்று அதிரடியாக பேசியுள்ளார்.

மேலும், டிஸ்ட்ரிபியூஷன் உரிமையை யார் முதலில் கேட்டார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீஸில் இருவரும் புகார் அளிக்கலாம். அப்போது உண்மை உலகத்துக்கு தெரிந்து விடும் என லலித் குமாருக்கு நேரடி சவாலே திருப்பூர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வடிவேலு தூக்கியெறிந்த காமெடி நடிகர்… சரியான அங்கீகாரத்தை கொடுத்து உதவிய மணிவண்ணன்…

லியோ படத்தின் ஷூட்டிங்கிற்காக 2 கோடி, 10 கோடி, 8 கோடி என பல முறை பணத்தை தன்னிடம் வட்டிக்கு வாங்கினார் லலித் குமார் என்கிற உண்மையையும் போட்டு உடைத்து விட்டார் திருப்பூர் சுப்பிரமணியன்.

Tags:    

Similar News