இப்ப வாங்கடா எல்லாரும்!.. பாட்டெல்லாம் வேறலெவல்!.. விடுதலை 2-வில் பின்னியெடுத்த இளையராஜா

80களில் இளையராஜாவின் இசையை மட்டுமே நம்பி தமிழ் சினிமா இயங்கியது என்று சொன்னால் அதில் மிகை இல்லை. ஏனெனில், அவரின் இசைதான் பல திரைப்படங்களையும் ஓட வைத்தது. ஒன்றுமில்லாத குப்பை படங்களுக்கும் கூட அற்புதமான பாடல்களை போட்டு கொடுத்து கல்லா கட்ட வைத்தவர் இளையராஜாதான். அதனால்தான் அப்போது அவர் தங்களை காப்பாற்ற வந்த கடவுளாக இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தெரிந்தார். இளையராஜாவின் சம்மத்தை பெறுவதற்காக அவர் இசையமைக்கும் பிரசாத் ஸ்டுடியோ முன் அதிகாலையிலேயே அறிமுக இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் காத்திருப்பார்கள். […]

Update: 2024-05-28 07:04 GMT

80களில் இளையராஜாவின் இசையை மட்டுமே நம்பி தமிழ் சினிமா இயங்கியது என்று சொன்னால் அதில் மிகை இல்லை. ஏனெனில், அவரின் இசைதான் பல திரைப்படங்களையும் ஓட வைத்தது. ஒன்றுமில்லாத குப்பை படங்களுக்கும் கூட அற்புதமான பாடல்களை போட்டு கொடுத்து கல்லா கட்ட வைத்தவர் இளையராஜாதான்.

அதனால்தான் அப்போது அவர் தங்களை காப்பாற்ற வந்த கடவுளாக இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தெரிந்தார். இளையராஜாவின் சம்மத்தை பெறுவதற்காக அவர் இசையமைக்கும் பிரசாத் ஸ்டுடியோ முன் அதிகாலையிலேயே அறிமுக இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் காத்திருப்பார்கள்.

இதையும் படிங்க: அப்பாவியான நடிப்பு… ஆனா மிரள வைத்த கமல் பட டைரக்டர்… கடைசி காலகட்டத்தில் இவ்ளோ சோகமா?

அவரை பார்த்ததும் அதில் பலரும் அவரின் காலில் விழுவார்கள். இளையராஜா பார்வை யார் மீது படுகிறதோ அவரின் படத்திற்கு அவர் இசையமைக்க சம்மதித்து விட்டார் என்றே அர்த்தம். ஸ்டுடியோவில் அவரின் தரிசனம் கிடைக்காதவர்கள் வீட்டிலிருந்து பிரசாத் ஸ்டுடியோவுக்கு அவர் வருவதற்கு இடையில் இருக்கும் கோடம்பாக்கம் பாலத்தில் நிற்பார்கள். அப்படி நின்ற சிலரின் படங்களுக்கும் இளையராஜா இசையமைத்திருக்கிறார். மறைந்த இயக்குனர் மற்றும் நடிகர் மனோபாலா அப்படி நின்றவர்களில் ஒருவர்தான்.

அதனால்தான் இளையராஜாவுக்கு கர்வம் அதிகரித்ததாக சொல்வார்கள். அவரை அப்படி மாற்றியது திரையுலகம்தான். அவரின் பாட்டுக்காக அவரின் கோபத்தை பொறுத்துக்கொண்டார்கள். ஆனால், அதே திரையுலகம்தான் ஏ.ஆர்.ரஹ்மான், தேவா என மற்ற இசையமைப்பாளர்கள் வந்த பின் இளையராஜாவை ஒதுக்க துவங்கியது.

இதையும் படிங்க: நான் ஐஷுவை காதலிக்கிறேனா? அடுத்த வீட்டு கதை நமக்கு எதுக்கு… கறாராக பேசிய பிக்பாஸ் நிரூப்…

இப்போது அனிருத்தின் காலமாக மாறிவிட்டது. விஜய், கமல், ரஜினி ஆகியோரின் படங்களுக்கும் அவர்தான் இசையமைக்கிறார். இளையராஜா இசையில் வெளியான பாடல்களும் பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை. ஆனால், வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் இளையராஜாவின் பாடல் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இந்த படத்தின் ஆடியோ உரிமை ரூ.1 கோடிக்கு விலை போனது.

இந்நிலையில், விடுதலை 2 படத்தில் இளையராஜா 4 அற்புதமான பாடல்களை கொடுத்திருக்கிறாராம். எனவே, இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் ரூ.4 கோடிக்கு வாங்கி இருக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடிக்கும் எனவும், இளையராஜா மீண்டும் ஒரு ரவுண்டு வாருவார் எனவும் சொல்கிறது படக்குழு.

Tags:    

Similar News