கோயிலில் நுழைய எம்ஜிஆர் பட இயக்குனருக்கு போடப்பட்ட தடை! அதையும் மீறி எப்படி படமாக்கினார் தெரியுமா?
Director Ellis R. Dungan: இந்திய சினிமாவே திரும்பி பார்க்க வைத்த நடிகராக எம்ஜிஆர் இருக்க அவரை இந்த திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்த பெருமை இயக்குனர் எல்லீஸ் ஆர். தங்கனை சேரும். மேலை நாட்டவரான எல்லீஸ் ஆர்.தங்கன் தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர்.
தமிழ் தெரியாது என்றாலும் தன்னுடைய உதவியாளர்களை வைத்துதான் படங்களை எடுத்திருக்கிறார். இவர் மேலை நாட்டவராக இருந்தததனால் எல்லீஸ் ஆர். தங்கனை கோயில்களில் அனுமதிக்க கோயில் நிர்வாகிகள் அனுமதிக்க வில்லையாம்.
இதையும் படிங்க: காவாலா பாட்டால கல்லா கட்டும் தமன்னா… அதுக்காக இவ்ளோவா?… இது கொஞ்சம் ஓவர்தான்…
அதனால் தன் உதவியாளர்களை வைத்தே சில கோயில் படக் காட்சிகளை எடுத்திருக்கிறார். அதுவும் கோயில் காம்பவுண்ட் சுவர் மீது எல்லீஸ் ஏறி உட்கார்ந்து கொண்டு தன் உதவியாளர்களை வைத்து எடுக்க சொல்லுவாராம்.
இந்த நிலைமை இப்படியே தொடர இதுக்கு ஒரு வழி வேண்டுமே என்று தன் உதவியாளரிடம் ஆலோசித்திருக்கிறார் எல்லீஸ் ஆர்.தங்கன். அதற்கு அவரின் உதவியாளர் தலையில் தலப்பாகை கட்டிக் கொண்டு வந்தால் யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள். காஷ்மீரி என்று நினைத்துக் கொள்வார்கள். காஷ்மீர்காரர்களுக்கு இந்த மாதிரி தடை இல்லை. அதனால் இப்படியே செய்யுங்கள் என்ற ஐடியாவை சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க: அன்லிமிட்டேட் அழகு அள்ளுது!.. ஜாக்கெட்டுதான் ஹலைட்!.. தூக்கத்தை கெடுக்கும் லாஸ்லியா…
அதிலிருந்தே கோயில்களில் படப்பிடிப்பு என்றால் எல்லீஸ் ஆர், தங்கன் தலையில் தலைப்பாகை கட்டிக் கொண்டுதான் படப்பிடிப்பை நடத்துவாராம். இவர் தமிழில் சதிலீலாவதி உட்பட இரு சகோதரர்கள், அம்பிகாபதி, மந்திரகுமாரி, சூர்யபுத்ரி, சகுந்தலா, காளமேகம், தாசிப்பெண் போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார்.
இந்தியாவில் படப்படிப்பு நடத்திய அமெரிக்கப் படங்களுக்கு ஆலோசகராகப் பணியாற்றினார் எல்லீஸ் ஆர். தங்கன். 90களின் ஆரம்பத்தில் அவர் தமிழ்நாடு வந்த போது அவருக்குத் தமிழ்த் திரையுலகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: விபத்தில் சிக்கி 23 அறுவை சிகிச்சைகள்!.. 3 வருடம் படுக்கை!.. சாதித்து காட்டிய சியான் விக்ரம்!..