காவாலா பாட்டால கல்லா கட்டும் தமன்னா… அதுக்காக இவ்ளோவா?… இது கொஞ்சம் ஓவர்தான்…

0
265
tamannah

Actress Tamannah: தமன்னா தமிழ் சினிமா நடிகைகளில் ஒருவர். இவர் கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இவருக்கு இப்படம் பெரிய அளவில் வெற்றிப்படமாக அமையவில்லை. இவர் தமிழை தவிர தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இதன்பின் இவர் படிக்காதவன், அயன், பையா போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இப்படங்கள் இவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்தன. இவர் ஒரு காலத்தில் மிகவும் பிஸியாக இருந்த நடிகைகளில் ஒருவர். தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் மாறி மாறி பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இதையும் வாசிங்க:கமலுடன் மீண்டும் இணையும் அந்த நடிகை!… உதட்ட பத்திரமா பாத்துக்க செல்லம்!..

ஆனால் பின் இவரின் மார்கெட் சரிய தொடங்கியது. தேவி, பெட்ரோமாக்ஸ், ஆக்‌ஷன் போன்ற திரைப்படங்களின் மூலம் இவர் தோல்வியையே சந்தித்தார். பின் ஓடிடி பக்கம் தனது கவனத்தை திருப்பினார். 11th hour, நவம்பர் ஸ்டோரி போன்ற பல வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் நடித்த வெப் சீரிஸான லஸ்ட் ஸ்டோரியினால் இவர் பல சர்ச்சைகளுக்கு உள்ளானார். ஆனால் இவை எதையுமே தமன்னா கண்டுகொள்ளவில்லை. ஜெயிலர் திரைப்படத்தில் காவாலா பாடலுக்கு நடனமாடியிருந்தார். இப்பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது.

இதையும் வாசிங்க:ஒரே நாளில் ரஜினியை மயக்கிய மனைவி லதா… காதலை சூப்பர்ஸ்டார் யார்கிட்ட முதலில் சொன்னாரு தெரியுமா..?

மேலும் இப்பாடல் மூலமாக தமன்னாவும் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இப்பாடல் வெற்றியடைந்த பின் தமன்னாவை பல திருமண நிகழ்ச்சிகளிலும் பெரிய பெரிய விழாக்களிலும் இப்பாடலுக்கு நடனமாட அழைக்கின்றனராம். ஆனால் இப்பாடலுக்கு இவர் நடனமாட கிட்டதட்ட ஒரு கோடி சம்பளமாக கேட்கின்றாராம்.

சமீபத்தில் நடிகை ரம்பாவின் கணவர் தொழில் ஆரம்பித்தார். அந்நிகழ்ச்சிக்கு தமன்னா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டாராம். இந்த நிகழ்ச்சிக்கு தமன்னா சம்பளமாக 40 லட்சம் ரூபாய் வசூலித்துவிட்டாராம். மொத்தத்தில் ஜெயிலர் பட பாடல் வெற்றிக்குபின் தமன்னா நன்றாக கல்லாக ட்டுகிறார்.

இதையும் வாசிங்க:லியோவால் தங்கலானுக்கு வந்த சோதனை!.. உழைப்பெல்லாம் வீணாப்போயிடுமா?!. அப்செட்டில் விக்ரம்…

google news