பொன்னியின் செல்வன் போஸ்டரோன்னு நினைச்சிட்டேன்!.. இந்தியன் 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வந்துடுச்சு!..

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே .சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12-ஆம் தேதி வெளியாக உள்ளதாக நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு சென்று நடிகர் கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் அந்த அறிவிப்பை வெளியிட்டனர். மேலும், வரும் ஜூன் ஒன்றாம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக […]

By :  Saranya M
Update: 2024-05-19 09:00 GMT

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே .சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12-ஆம் தேதி வெளியாக உள்ளதாக நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு சென்று நடிகர் கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் அந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

மேலும், வரும் ஜூன் ஒன்றாம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் தற்போது ஜூலை 12-ஆம் தேதிக்கு தள்ளிப் போய் இருக்கிறது.

இதையும் படிங்க: 12 வயலின்.. 10 ஆயிரம் சம்பளம்!.. இளையராஜா போட்ட கிளாசிக் பாடல்கள்!.. அட அந்த படமா?!…

ஜூன் 28-ஆம் தேதி பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், திஷா பதானி மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி திரைப்படம் வெளியாகிறது. இந்தியன் 2 திரைப்படத்துக்கு பெரிய அளவில் புரமோஷன் செய்ய வேண்டி உள்ள நிலையில், அந்த படத்தின் ரிலீசை ஒரு மாத காலம் தள்ளி வைத்துள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு கோப்பையை வெல்லும் என்றும் விராட் கோலியின் ஆர்சிபி அணி அடுத்தாண்டு வேண்டுமானால் கோப்பையை வெல்லட்டும் என கமல்ஹாசன் பேசிய நிலையில், நேற்றைய போட்டியில் சென்னை அணியை ஆர்சிபி அணியினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டனர். அதற்கு காரணமே கமல்ஹாசன் தான் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கை முழுவதும் டாட்டூ! வித்தியாசமான கெட்டப்பில் அஜித்.. வெளியான குட் பேட் அக்லியின் போஸ்டர்

லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் மே 22-ஆம் தேதி அனிருத் இசையில் வெளியாகும் என்கிற அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ள லைகா நிறுவனம் கமல்ஹாசன் குதிரையில் ஏறி வரும் சில்லவுட் போஸ்டரைவெளியிட்டுள்ளனர்.

அந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் இன்னமும் பொன்னியின் செல்வன் ஃபீவரில் இருந்து லைக்கா நிறுவனம் வெளியே வரவில்லையா எனக்கேட்டு கலாய்த்து வருகின்றனர். அனிருத் இசையில் ஏற்கனவே வெளியான இந்தியன் 2 படத்தின் ’கம்பேக் இந்தியன்’ பாடல் ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், இந்தப் பாடலாவது படத்திற்கான ஹைப்பை கொடுக்குமா என்பதை இருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: திடீரென கேட்ட அஜித்!.. சிவகார்த்திகேயனுக்கு வந்த அந்த ஆசை!.. நடக்குமான்னு பார்ப்போம்!…

Tags:    

Similar News