பலே ஆளு சார் நீங்க… இருவர் படத்துக்கு ஐஸ் கால்ஷூட்டுக்கு அலட்டிக்காத மணிரத்னம்…
தமிழ் சினிமாவில் மற்ற எல்லா மொழி ரசிகர்களுக்குமே ஐஸ்வர்யா ராயை அப்படி பிடிக்கும். அவரின் அழகுக்கு அத்தனை ரசிகர்கள் இத்தனை வருடத்தினை கடந்தும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஐஸ்வர்யா ராய் கால்ஷீட்டுக்காக தவம் இருந்த இயக்குனர்களுக்கு மத்தியில் இருவர் படத்துக்கு அசால்ட்டாக மணிரத்னம் எப்படி கால்ஷூட் வாங்கினார் தெரியுமா? 1994ம் ஆண்டு உலக அழகி பட்டத்தினை ஐஸ்வர்யா வாங்கிய போது இந்தியாவே திரும்பி பார்க்க வைத்தவர். முதலில் சினிமாவில் நடிக்கும் ஐடியாவே இவரிடம் இல்லை. நிறைய விளம்பர படங்களிலேயே […]
தமிழ் சினிமாவில் மற்ற எல்லா மொழி ரசிகர்களுக்குமே ஐஸ்வர்யா ராயை அப்படி பிடிக்கும். அவரின் அழகுக்கு அத்தனை ரசிகர்கள் இத்தனை வருடத்தினை கடந்தும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஐஸ்வர்யா ராய் கால்ஷீட்டுக்காக தவம் இருந்த இயக்குனர்களுக்கு மத்தியில் இருவர் படத்துக்கு அசால்ட்டாக மணிரத்னம் எப்படி கால்ஷூட் வாங்கினார் தெரியுமா?
1994ம் ஆண்டு உலக அழகி பட்டத்தினை ஐஸ்வர்யா வாங்கிய போது இந்தியாவே திரும்பி பார்க்க வைத்தவர். முதலில் சினிமாவில் நடிக்கும் ஐடியாவே இவரிடம் இல்லை. நிறைய விளம்பர படங்களிலேயே பிஸியாக நடித்து வந்து இருக்கிறார். அப்படி இருக்கும் போது அவரின் முதல் விளம்பரத்தினை ஷூட் செய்தவரே தமிழகத்தினை சேர்ந்த ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் தானாம்.
இதையும் படிங்க : ராமராஜன் பேர சொன்னதும் கடுப்பாகி எழுந்து போன கவுதமி!.. அப்படி என்னம்மா நடந்துச்சி!…
இதனாலே அவர் மீது ஐஸ்வர்யாவிற்கு தனி மரியாதை உண்டு. தன்னை பார்க்க ராஜீவ் வந்தால் அவரை காக்கக்கூட ஐஸ் வைக்க மாட்டார் எனக் கூறப்படுகிறது. அப்படி ஒருமுறை மணிரத்னம் இயக்க இருந்த இருவர் படத்தில் முக்கிய ரோலுக்கு நடிகையை தேடி வந்து இருக்கிறார். அப்போது உலக அழகி பட்டம் ஐஸ்வர்யாவை வாங்கி மூன்று வருடங்களை கடந்து இருந்தது. அவரையே அந்த கேரக்டருக்கு நடிக்க வைக்கலாம் என முடிவெடுத்து இருக்கிறார். இதை தொடர்ந்து ராஜீவ் தான் இந்த படம் குறித்து ஐஸ்வர்யாவிடம் சென்று கேட்டு இருக்கிறார். சற்றும் யோசிக்காதவர் உடனே ஓகே சொல்லி விட்டாராம்.
ஐஸ்வர்யாவின் நடிப்பில் முதல் படம் என்றாலும் இருவர் படம் ஐஸுக்கு சிறந்த படமாக அமைகிறது. பாசிட்டிவ் ரெஸ்பான்ஸால் தொடர்ச்சியாக நிறைய வாய்ப்புகள் குவிகிறது. ஒரு நாளைக்கே 6 அல்லது 7 படத்தின் கால்ஷூட்டில் வேலை செய்யும் நிலை உருவாகிறது. தென்னிந்தியாவில் இருந்து வந்த நடிகை என்றாலும் இந்தியை தாண்டி நடிக்கமுடியாத நிலை வருகிறது. இதனால் தொடர்ச்சியாக ஷூட்டிங்கிலேயே இருக்கிறார்.
இதையும் படிங்க : அடுத்த சூப்பர்ஸ்டார் இல்லைங்க!.. அடுத்த உலக நாயகனாகவே ஆகப் போகும் விஜய்!.. விளங்குமா?..
24 மணி நேரமும் வேலை செய்யும் நிலை இருந்த போது டயட்டீஷியன் இப்படி வேலை செய்யாதீங்க. இது உங்கள் அழகை மட்டுமல்ல ஆரோக்கியத்தினை கெடுக்கும். இதனால் உங்களுக்கு வாய்ப்புகள் போனாலும் எதிராளிகள் உருவானாலும் கூட பரவாயில்லை. உடல் முக்கியம் என அறிவுரை கொடுக்கின்றனர். இதை ஐஸ்வர்யா சம்மதித்து சில வாய்ப்பினை விலக்குகிறார். அவரை திமிர் பிடித்தவர் எனப் பலர் கூறினால் கூட இன்றும் தனக்கென ஒரு இடத்தினை பல மொழிகளில் தக்க வைத்து இருக்கிறார் என்பதே உண்மை.
இதனால் தனக்கு முதல் படத்தினை சிறப்பாக அமைத்து கொடுத்த மணிரத்னம் எப்போது கேட்டாலும் அவருக்கு கால்ஷூட் இல்லை என்றே ஐஸ்வர்யா இதுவரை சொன்னது இல்லையாம். அதனால் அவருடன் ஒவ்வொரு முறை படம் செய்யும் போது தனக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதாகவே ஐஸ் நம்புகிறார். இது சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் கூட நிரூபிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.