விஜயின் அடுத்த படத்தை தயாரிக்கப் போவது இவரா..? நம்பவே முடியலயே... காண்பது கனவா இல்லை நனவா..?!

தளபதி விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக தளபதி 69 படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது பற்றி இரு பிரபலங்கள் அலசுகிறார்கள். யார் யார், என்னென்ன சொல்றாங்கன்னு பார்க்கலாமா... தளபதி விஜயின் அடுத்த படத்தை எச்.வினோத் தான் டைரக்டர். ஆனால் அந்தப் படத்தோட தயாரிப்பாளர் யாருன்னே தெரியாம இருக்கு. இதுக்கு நடுவுல வெளியில வர்ற செய்திகள் இப்படி எல்லாம் வருது. விஜய்க்கு நிர்வாகியாகவும், அவருடைய கால்ஷீட்டை எல்லாம் பார்த்துக்கிட்டு […]

Update: 2024-06-09 05:48 GMT

Vijay 69

தளபதி விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக தளபதி 69 படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது பற்றி இரு பிரபலங்கள் அலசுகிறார்கள். யார் யார், என்னென்ன சொல்றாங்கன்னு பார்க்கலாமா...

தளபதி விஜயின் அடுத்த படத்தை எச்.வினோத் தான் டைரக்டர். ஆனால் அந்தப் படத்தோட தயாரிப்பாளர் யாருன்னே தெரியாம இருக்கு. இதுக்கு நடுவுல வெளியில வர்ற செய்திகள் இப்படி எல்லாம் வருது. விஜய்க்கு நிர்வாகியாகவும், அவருடைய கால்ஷீட்டை எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்குற ஜெகதீஷே அந்தப் படத்தைத் தயாரிக்கிற மாதிரி செய்திகள் எல்லாம் வெளியாகிக்கிட்டு இருக்கு. நீங்க என்ன சொல்றீங்கன்னு தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் பிரபல விமர்சகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் கேட்டார்.

இதையும் படிங்க... இடுப்பு மடிப்பு காட்டினாத்தான் போனி ஆகும்!.. பழைய ரூட்டை கையிலெடுத்த ரம்யா!…

அதற்கு தனஞ்செயன் இப்படி சொல்கிறார். இதுபற்றிய நிறைய விஷயங்கள் வந்துக்கிட்டே இருக்கு. தயாரிப்பாளர் லலித் பேரு வந்தது. கர்நாடகாவில் இருந்து கேவிஎன் புரொடக்ஷன் பேரு வந்தது. விஜய் சாரைப் பொருத்த வரை அடுத்தக் கட்டமாக வரப்போற தன்னோட படம் எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் இருக்கணும்.

அவரோட அரசியல் கொள்கைக்கு இந்தப் படம் உதவியா இருக்கணும். தயாரிப்பாளரோட தலையீடு இருக்கக்கூடாது. இந்தப் படம் எலெக்ஷனுக்கு 6 மாசத்துக்கு முன்னாடி வந்துடும். ரமணா படம் விஜயகாந்துக்கு பெரிய அரசியல் சப்போர்ட்டா அமைஞ்சது.

அந்த மாதிரி தான் விஜயும் எதிர்பார்க்கிறார். எனக்கு தெரிஞ்சு அவர் தன்னோட டீமோடு போறதுக்குத் தான் வாய்ப்பு அதிகம். தயாரிப்பு மட்டும் பார்த்துக்கிட்டா போதும். அதுக்கு செலவு பிரச்சனையே கிடையாது. அதுக்கு அவர் சேலரி வாங்க மாட்டார். விஜய் சாரோட படத்துக்கு டிஜிட்டல் ரைட்ஸ்சுக்கு ஒரு தொகை உடனே போயிடும். சேட்டிலைட்டுக்கும் போயிடும். அதுல இருந்து வர்ற அட்வான்ஸ்லயே படத்தை முடிச்சிடலாம்.

இதையும் படிங்க... கிடைக்கிறதே குதிரைக்கொம்பு… அதுல வேற இப்படியா பண்ணுவீங்க…? முருகதாஸை டார்ச்சர் பண்ணிய அசின்..!

அதுக்கு அப்புறம் கூட விஜய்க்கு சம்பளம் கொடுத்துக்கலாம். அதனால இது வந்து அவரோட டீம்ல இருந்து தான் பண்ண முடியும். எனக்குத் தெரிஞ்சி இந்தக் கடைசி படம் அரசியல்ல இறங்குறதுக்கு முன்னாடி அவரு டீமுக்குள்ள தான் இருக்கும்னு நினைக்கிறேன். வேற யாரும் தயாரிக்க முன்வந்தால் அவர் மறுத்து விடுவார். அரசியலுக்குப் பின்னாடி வேணா வேற படங்கள் இருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News