இசை புயலின் இந்த செயலால் வெறுத்துப்போன ரசிகர்கள்.! என்ன சார் இப்படி பண்ணிடீங்க..,

தமிழ் சினிமாவில் எத்தனை அனிருத் வந்தாலும்,  என்றும் தான் நம்பர் 1 என்பதை சிம்மாசனத்தில் தனது முதல் படத்தில் இருந்தே காட்டி வருகிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்.  தற்போதுள்ள பாடல்களுக்கு ஆயுள் மிக மிக குறைவு, ஆனால், இவரது பாடல்களுக்கு ஆயுள் இன்னும் நூறு ஆண்டுகளாவது இருக்கும். அந்தளவுக்கு இன்னும் , தனது இசை ராஜ்யத்தை  தனது ரசிகர்களிடம் காட்டி வருகிறார் ஏ.ஆர்.ரகுமான். இவர் மொழிகள் கடந்து படங்களுக்கு இசை அமைப்பதை தவிர்த்து, புதிய இசை நிகழ்ச்சிகள் நடத்துவது, […]

By :  Manikandan
Update: 2022-05-22 03:20 GMT

தமிழ் சினிமாவில் எத்தனை அனிருத் வந்தாலும், என்றும் தான் நம்பர் 1 என்பதை சிம்மாசனத்தில் தனது முதல் படத்தில் இருந்தே காட்டி வருகிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். தற்போதுள்ள பாடல்களுக்கு ஆயுள் மிக மிக குறைவு, ஆனால், இவரது பாடல்களுக்கு ஆயுள் இன்னும் நூறு ஆண்டுகளாவது இருக்கும்.

அந்தளவுக்கு இன்னும் , தனது இசை ராஜ்யத்தை தனது ரசிகர்களிடம் காட்டி வருகிறார் ஏ.ஆர்.ரகுமான். இவர் மொழிகள் கடந்து படங்களுக்கு இசை அமைப்பதை தவிர்த்து, புதிய இசை நிகழ்ச்சிகள் நடத்துவது, புதிதாய் ஆல்பம் தயாரிப்பது என செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

இவரது இசை தயாரிப்பில் கடைசியாக 99 சாங்ஸ் எனும் திரைப்படம் வெளியாகி இருந்தது. இசை ரசிகர்களுக்கு அது இசை விருந்தாக அமைந்தது. தற்போது அதே போல் புதிய முயற்சியாக ஓர் படத்தை இயக்கியுள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.

இதையும் படியுஙங்களேன் - அடுத்த அசுரனாக மாறிவரும் ஐஸ்வர்யா ரஜினி.! வீடியோவில் வியர்க்க வியர்க்க என்னென்ன செய்றார் பாருங்க...,

அதாவது, அந்த திரைப்படம் 30 நிமிடங்கள் மட்டுமே ஓடும் குறும்படம் ஆகும். இதில் இசையில் இதுவரை கேட்டிராத சத்தங்கள் அடங்கி இருக்குமாம். சாரி யு டியூப் சேனலில் வெளியாகும் போது பார்த்துக்கொள்ளலாம் என இருந்த ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக ஒரு செய்தி வெளியானது.

அதாவது, அதனை வெறும் கண்ணால் பார்ர்கும் 2டி முறையில் ரிலீஸ் ஆகாதாம் . அதனை VR எனப்படும் விர்ச்சுவல் ரியாலிட்டி எனப்படும் தொழில்நுட்பத்தில் அந்த கருவியை கொண்டு தான் பார்க்க முடியுமாம். இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள், நீங்கள் முதன் முறையாக இயக்கிய படத்தை கடைசிகட்ட ரசிகன் வரை பார்க்கலாம் என நினைத்தால் இப்படி செய்துவிட்டீர்களே என புலம்பி வருகின்றனராம்.

Tags:    

Similar News