18 படத்துல 3 படம் தான் ஹிட்டு!.. பிரபல தயாரிப்பாளர் விடாமல் பெரிய படம் பண்றாரே?.. எப்படிங்க?

ஒரு பக்கம் கல்வி தந்தையாக செயல்பட்டு வரும் ஐசரி கணேஷ் இன்னொரு பக்கம் சினிமா தயாரிப்பாளராக பல படங்களை தயாரித்து வருகிறார். ஆனால், அவருடைய டீம் சரியில்லையா? அல்லது அவரது தேர்வுகள் சரியில்லையா? என்பதே தெரியவில்லை. தொடர்ந்து அவரது தயாரிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாமே ஃபிளாப் ஆகி வருகின்றன. ஆனால், மனம் தளராமல் தொடர்ந்து பெரிய படங்களை மனுஷன் எப்படித்தான் தயாரிக்கிறாரோ என்கிற கேள்வி சினிமா உலகில் பலரது மனங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த தயாரிப்பாளர் வேறு […]

;

By :  Saranya M
Published On 2025-04-27 08:29 IST   |   Updated On 2025-04-27 08:29:00 IST

ஒரு பக்கம் கல்வி தந்தையாக செயல்பட்டு வரும் ஐசரி கணேஷ் இன்னொரு பக்கம் சினிமா தயாரிப்பாளராக பல படங்களை தயாரித்து வருகிறார். ஆனால், அவருடைய டீம் சரியில்லையா? அல்லது அவரது தேர்வுகள் சரியில்லையா? என்பதே தெரியவில்லை. தொடர்ந்து அவரது தயாரிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாமே ஃபிளாப் ஆகி வருகின்றன.

ஆனால், மனம் தளராமல் தொடர்ந்து பெரிய படங்களை மனுஷன் எப்படித்தான் தயாரிக்கிறாரோ என்கிற கேள்வி சினிமா உலகில் பலரது மனங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த தயாரிப்பாளர் வேறு யாருமில்லை நம்ம ஐசரி கணேஷ் தான்.

2016ம் ஆண்டு பிரபுதேவா, தமன்னாவை வைத்து தேவி எனும் பேய் படத்தை எடுத்தார். அந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது. மீண்டும் தேவி 2 எடுத்தார் படுதோல்வியை சந்தித்தடு. ஜெயம் ரவி, அரவிந்த் சாமி நடித்த தனி ஒருவன் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், அதே கூட்டணியில் போகன் படத்தை தயாரித்தார். அந்த படம் அவருக்கு லாபத்தைக் கொடுக்கவில்லை.

சம் டைம்ஸ் மற்றும் ஜுங்கா உள்ளிட்ட படங்களும் சங்கு ஊதிவிட்டன. ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான எல்கேஜி படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த முதல் படமாக மாறியது. அதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த கோமாளி படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

அதன் பின்னர் வெளியான பப்பி, எனை நோக்கிப் பாயும் தோட்டா, சீறு, படங்கள் சொதப்ப மீண்டும் ஆர்ஜே பாலாஜி உதவியுடன் நயன்தாரா நடித்து வெளியான மூக்குத்தி அம்மன் படம் பெரிய லாபத்தைக் கொடுத்தது. ஆனால், அந்த படத்துக்குப் பிறகு வெளியான குட்டி ஸ்டோரி, வெந்து தணிந்தது காடு, சிங்கப்பூர் சலூன், ஜோஷ்வா இமைபோல் காக்க, பிடி சார், அகத்தியா மற்றும் இந்த வாரம் வெளியான சுமோ படங்கள் வரை பெரிதாக ஹிட் கொடுக்கவில்லை.

அடுத்ததாக ஜீனி மற்றும் மூக்குத்தி அம்மன் 2 படங்களையும் பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறார் ஐசரி கணேஷ். அவரது நல்ல மனசுக்கு தொடர்ந்து வெற்றிகளை ருசிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News