காலை வாரிய ஜப்பான்!.. அதிரடியாக ஒரு படத்தில் இருந்து இன்னொரு படத்துக்கு ஜம்ப்பான கார்த்தி?
குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி என நல்ல கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய ராஜுமுருகனாச்சேன்னு ஜப்பான் படத்தில் நடிக்க போன கார்த்திக்கு எப்போடா பெரிய ஹீரோ சிக்குவார் நாமளும் கமர்ஷியல் படம் எடுத்து லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லீ வரிசையில் வரலாம் என நினைத்து விட்டார் போல, எதையுமே ஒழுங்கா எடுக்க முடியாமல் படத்தை கண்டம் பண்ணி விட்டார்.
பேசும் போது அப்படி பேசி இந்த படம் வெளியே வந்தால் புரட்சியே வெடிக்கும் எல்லாம் பில்டப் பண்ண இயக்குநர் ராஜு முருகன் மீது கார்த்தி பயங்கர கடுப்பில் இருக்கிறாராம். ஹிட் படத்தை கொடுத்த அமீருக்கே அந்த கதி என்றால் இவரது நிலைமை எல்லாம் என்ன சொல்லவா வேணும் என்கின்றனர்.
இதையும் படிங்க: படுத்தே விட்ட ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பாக்ஸ் ஆபிஸ்!.. பொங்கலுக்கும் இதே நிலைமை தானா?..
இந்நிலையில், ராஜு முருகன் மட்டுமின்றி இன்னொரு இயக்குநரையும் ஓடவிட்டு இருக்கிறாராம் கார்த்தி. சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படங்களை இயக்கி அதன் பின்னர் என்ன ஆனார் என்றே தெரியாமல் அப்ஸ்காண்ட் ஆன நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அந்த படத்தின் மீது நம்பிக்கை இல்லையா? அல்லது என்ன ஆச்சுன்னே தெரியல தற்போது அந்த படத்தில் இருந்து ஜம்ப் ஆகி 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டாராம்.
நலன் குமாரசாமி படம் பல ஆண்டுகளாக உருவாகி வரும் நிலையில், திட்டமிட்டபடி ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ் ஆகுமா? என்கிற கேள்வியே எழுந்துள்ளதாம்.
இதையும் படிங்க: விஷ்ணு விஷாலை துரத்திய சூப்பர்ஸ்டார் சர்ச்சை!.. ஓவரா அடிக்காதீங்க என விளக்கம் கொடுத்த லால் சலாம் ஹீரோ!..