அந்த படம் ஃபிளாப் ஆனதுக்கு காரணமே ஜெயம் ரவிதான்!.. புலம்பும் இயக்குனர்!..
தமிழ் சினிமாவில் ஒரு கதை ஒரு ஹீரோவுக்கு சொல்லப்பட்டு அதில் வேறு ஒரு ஹீரோ நடிப்பது என்பது எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலிருந்து நடந்து வருகிறது. அதாவது ஒரு இயக்குனர் ஒரு ஹீரோவிடம் ஒரு கதை சொல்வார். அந்த கதை அந்த நடிகருக்கும் பிடித்துப்போகும். ஆனால், சில காரணங்களால் அந்த நடிகரால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போக வேறு ஹீரோ அதில் நடிப்பார். கமல் ஷங்கரை வைத்து ரோபோ என படம் எடுக்க திட்டமிட்டார். அப்படத்தின் போட்டோஷூட் […]
தமிழ் சினிமாவில் ஒரு கதை ஒரு ஹீரோவுக்கு சொல்லப்பட்டு அதில் வேறு ஒரு ஹீரோ நடிப்பது என்பது எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலிருந்து நடந்து வருகிறது. அதாவது ஒரு இயக்குனர் ஒரு ஹீரோவிடம் ஒரு கதை சொல்வார். அந்த கதை அந்த நடிகருக்கும் பிடித்துப்போகும்.
ஆனால், சில காரணங்களால் அந்த நடிகரால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போக வேறு ஹீரோ அதில் நடிப்பார். கமல் ஷங்கரை வைத்து ரோபோ என படம் எடுக்க திட்டமிட்டார். அப்படத்தின் போட்டோஷூட் எல்லாம் நடந்தது. ஆனால், அது கைவிடப்பட்டு பின்னாளில் ரஜினியை வைத்து எந்திரனாக எடுத்தார் ஷங்கர்.
இதையும் படிங்க: எப்பவுமே ஹைடெக் தான்! இந்த ஒரு காரணத்துக்காகவா விலகினார்? வெளியான நயன் – சசிகுமார் பட சீக்ரெட்ஸ்
கஜினி கதை கூட முருகதாஸ் சொன்னது அஜித்திடம்தான். ஆனால், அஜித் காத்திருக்க சொன்னார். அது முடியாமல் சூர்யாவை வைத்து இயக்கினார் முருகதாஸ். அதனால் இப்போது வரை முருகதாஸுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை அஜித். இப்படி சினிமாவில் பல கதைகள் இருக்கிறது.
மருதமலை, படிக்காதவன், மாப்பிள்ளை, அலெக்ஸ் பாண்டியன் என பல திரைப்படங்களை இயக்கிய சுராஜ். காதல், காமெடி கலந்த கதையை எடுக்கும் கமர்ஷியல் இயக்குனர் இவர். இவரின் இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் திரிஷா நடித்து வெளிவந்த திரைப்படம்தான் சகலகலா வல்லவன்.
இதையும் படிங்க: பிசியா நடிச்சிக்கிட்டு இருந்த பரத்!.. இவரு நிலமை இப்படி ஆகிப்போச்சே!…
இந்த படம் படுதோல்வி அடைந்தது. இந்ந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய அப்படத்தின் இயக்குனர் சுராஜ் ‘சகலகலா வல்லவன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது தனுஷ்தான். அவரிடம் கதை சொல்லி துவங்கிய வேண்டிய நேரத்தில் அவரால் நடிக்க முடியவில்லை. அந்த கதையை நான் ஜெயம் ரவியிடன் சொன்ன்னேன். அவருக்கு அது பிடித்துப்போய் படம் உருவானது.
ஜெயம் ரவியை போன்ற ஒருவரை பிடிக்காமல் திரிஷா நடந்துகொள்வதாக கதை போனது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. தவறான நடிகர் தேர்வு ஒரு படத்தை தோல்வி அடையசெய்துவிடும் என்பதை அப்படத்தில் கற்றுகொண்டேன். அந்த படத்தில் தனுஷ் நடித்திருந்தால் படம் வெற்றி பெற்றிருக்கும்’ என சொன்னார்.