ஜெயம் ரவியின் அடுத்த சம்பவம்.. இதாவது இறைவன் போல இல்லாமல் இருந்தால் சரி!.. சைரன் டீசர் எப்படி இருக்கு?
இயக்குனர் ஆண்டனி பரத்வாஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரகனி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள சைரன் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று இரவு வெளியாகும் ஷோவில் டீசரை வெளியிட நடிகர் ஜெயம் ரவி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நேற்று சென்றிருந்தார். இந்நிலையில், சோஷியல் மீடியாவில் லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது அந்த டீசரை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அப்போ பிரதீப் அப்படித்தானா?.. அசிங்கப்பட்ட தன்னோட இமேஜை சரி செய்ய அத்தனை குறும்படம் போட்ட ஆண்டவர்!..
சிறையில் கைதியாக 14 ஆண்டுகள் தண்டனை பெற்று வந்த ஜெயம் ரவி ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றிக் கொண்டே தன்னை சிறைக்குள் தள்ளி தனது வாழ்க்கையை கெடுத்தவனை பழிவாங்க துடிப்பதும், ஜெயம் ரவியை கைது செய்யும் போலீஸ் அதிகாரியாக கீர்த்தி சுரேஷ் வருவதும், அவருக்கு உயர் அதிகாரியான நெப்போலியன் அழுத்தம் கொடுப்பதுமாக டீசர் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இளம் வயது ஜெயம் ரவி அனுபமா பரமேஸ்வரன் உடன் திருமணம் செய்துக் கொண்டு அழகான வாழ்க்கையை வாழ்ந்து வரும் நிலையில், கண்டிப்பாக மனைவியை வில்லன் ஆட்கள் கொன்றது தான் இந்த பழிவாங்கும் படலத்துக்கு காரணமாக இருக்கும் என தெரிகிறது.
இதையும் படிங்க: லியோவுக்கு மட்டும் காலை 7 மணி காட்சிக்கு அனுமதியில்லை!.. சல்மான் கான் படத்துக்கு மட்டும் அனுமதியா?..
ஜெயம் ரவி சோலோவாக நடித்து வெளியான அகிலன் மற்றும் இறைவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை பாடாய்ப்படுத்திய நிலையில், இந்த சைரன் திரைப்படத்தின் காட்சிகளும் பல படங்களில் பார்த்து பழக்கப்பட்ட பழிவாங்கும் கதையாகவே உள்ளது. இந்த படத்தின் திரைக்கதையாவது கொஞ்சம் வித்தியாசமாக இருந்து பரபரப்பாக ரசிகர்களை மகிழ்வித்தால் தான் தப்பிக்கும் என தெரிகிறது. அடுத்த மாதம் மீண்டும் ஜெயம் ரவி தன்னுடைய இன்னொரு படத்துடன் ரசிகர்களை சந்திக்க உள்ளார்.
கீர்த்தி சுரேஷை போலீஸ் கெட்டப்பில் பார்க்கத்தான் ரொம்ப பாவமாக இருக்கிறது. இறைவன் படத்தில் நயன்தாரா, சைரன் படத்தில் கீர்த்தி சுரேஷ். இன்னும் கைவசம் 9 படங்களை வைத்திருக்கிறார் நம்ம ஜெயம் ரவி என்பது கூடுதல் சிறப்பு.