லியோவுக்கு மட்டும் காலை 7 மணி காட்சிக்கு அனுமதியில்லை!.. சல்மான் கான் படத்துக்கு மட்டும் அனுமதியா?..

திருப்பூர் சுப்பிரமணியம் தியேட்டரிலேயே சல்மான் கானின் டைகர் 3 படத்துக்கு அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி எப்படி வழங்கப்பட்டது என விஜய் ரசிகர்கள் கொதித்துள்ளனர்.

ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் விஜய்யின் லியோ படங்களுக்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி கொடுக்க முடியாது என கடைசி வரை தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை விடுத்தும் மறுக்கப்பட்ட நிலையில், சல்மான் கான் டைகர் 3 படம் திருப்பூர் ஸ்ரீசக்தி சினிமாஸில் காலை 7.10 மணி, 7.35 மணி, 8 மணி, 8.30 மணி என 9 மணிக்கு முன்பாகவே பல ஷோக்களை போட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தித்திக்கும் தீபாவளியை மையமாகக் கொண்ட தமிழ் படங்கள் – ஒரு பார்வை

மேலும், பல திரையரங்குகளில் சல்மான் கானின் டைகர் 3 படத்துக்கு அதிகாலை காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நடிகர் விஜய்க்கு ஒரு நியாயம், சல்மான் கான் படத்துக்கு ஒரு நியாயமா? தமிழ்நாட்டில் தமிழ் நடிகரின் படத்துக்கே உரிமையும் பாதுகாப்பும் தர முடியாதா? என்கிற கேள்வியை விஜய் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

எந்த படத்துக்குமே காலை 9 மணிக்கு முன்னதாக ஷோ போட முடியாது என திருப்பூர் சுப்பிரமணியம் பேசிய நிலையில், இப்போ அவருடைய தியேட்டரிலேயே எப்படி போட்டார் என கேள்விகள் கிளம்பி உள்ளன.

இதையும் படிங்க: பிரதீப்புக்கு பேச வாய்ப்பு கொடுத்ததை காட்டிய கமல்!.. புல்லி கேங்குக்கும் குறும்படம் போட்டு செம ஆப்பு!..

ஆனால், நடிகர் விஜய்யின் படத்துக்கு இருக்கும் கூட்டமும், சல்மான் கான் படத்துக்கு வரும் கூட்டமும் ஒன்றல்ல என்பதனால், அதிகாலை காட்சி திரையிட்டாலும் எந்தவொரு சட்ட ஒழுங்கு பிரச்சனை வராது என்பதால் அதிகாலை காட்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால், இது தமிழ் சினிமாவுக்கும் நடிகர் விஜய்க்கும் மறுக்கப்படும் நீதியாகவே விஜய் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

Related Articles
Next Story
Share it