பிரதீப்புக்கு பேச வாய்ப்பு கொடுத்ததை காட்டிய கமல்!.. புல்லி கேங்குக்கும் குறும்படம் போட்டு செம ஆப்பு!..

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்கள் எல்லாம் புல்லி கேங்காக மாறி ஒரு ஆண் போட்டியாளரை வீட்டை விட்டே வெளியேற்ற கமலையே பகடை காயாக மாற்றிவிட்டனர்.

இந்நிலையில், சனிக்கிழமை நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து பட்டாசாக வெடித்தது. கமல்ஹாசன் தான் பிரதீப் ஆண்டனியை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றியதாக இந்த வாரம் புல்லி கேங் மாற்றி பேசிய நிலையில், இரண்டு மூன்று குறும்படங்கள் போட்டு பிரதீப் ஆண்டனிக்கு பேச வாய்ப்பு கொடுத்தது மற்றும் அதன் பின்னர் அவருக்கு கொடுத்த 45 நிமிடங்கள் அவகாசம் கொடுத்தும் அவர் ஒருவரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை.

இதையும் படிங்க: வழக்கறிஞராக வரிந்துக்கட்டி நடித்துள்ள ஜெய்!.. அருண்ராஜா காமராஜின் லேபில் வெப்சீரிஸ் விமர்சனம் இதோ!..

பிரதீப் ஆண்டனிக்கு எதிராக 12 போட்டியாளர்கள் பலரும் ரெட் கார்டு கொடுத்து அவரை வெளியே அனுப்பியது சரி தான் என்றும் ஆனால், அவர் மீது நீங்கள் வைத்த குற்றச்சாட்டு உண்மையா? அல்லது பொய்யா? என கமல் இரண்டு குறும்படங்களை போட்டு புல்லி கேங்கை போட்டு பொளந்து விட்டனர்.

பிரதீப் ஆண்டனிக்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையா என மறுபடியும் மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ஐஷூ, ரவீனா தாஹா உள்ளிட்ட போட்டியாளர்களிடம் கேட்டு கமல் சார் ரெட் கார்டு கொடுக்கல, கமல் சார் என்ன பண்ணாரு தெரியுமா என நீங்க மெஜாரிட்டியாக பெண்களுக்கு சேஃப்டி இல்லை என கொடுத்த புகாருக்கான நடவடிக்கையை நிர்வாகத்திடம் சேர்ந்து எடுத்து தான் பிரதீப் ஆண்டனியை வெளியே அனுப்பினோம் எனக் கூறி பிரதீப் ஆண்டனிக்கு எதிராக நான் ரெட் கார்டு கொடுக்கவில்லை என சேஃப் ஆக கமல் தப்பித்துக் கொண்டார்.

இதையும் படிங்க: ஒரு வழியா பிரதீப் ரங்கநாதன் படத்தை ஆரம்பிக்கும் நயன்தாரா கணவர்!.. அந்த ஹிட் ஸ்டாரும் இணைந்துள்ளாராம்!..

 

Related Articles

Next Story