கோபத்தில் ‘முடியாது’ என மறுத்த வாலி!. சமாதானம் செய்த கலைஞர்!.. எம்.ஜி.ஆர் சொன்ன அதே டயலாக்!.

Vaali and mgr:1950,60களில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி. கவிஞர் கண்ணதாசன் கோலோச்சிய போதே அவருக்கு இணையாக முன்னேறி பேசப்பட்டவர். துவக்கம் முதலே பக்தி, காதல், தாய் பாசம், தத்துவம் என பல சூழ்நிலைகளுக்கும் பாடல்களை எழுதியவர். இவர் எழுதிய பல பாடல்களை கண்ணதாசன்தான் எழுதினார் என பலரும் நினைத்தனர். கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே மனஸ்தாபம் வந்து பிரிந்த போது எம்.ஜி.ஆரின் அனைத்து படங்களுக்கும் வாலியே பாடல்களை எழுதினார். எம்.ஜி.ஆர் படத்தில் […]

Update: 2023-11-18 00:28 GMT

Vaali and mgr:1950,60களில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி. கவிஞர் கண்ணதாசன் கோலோச்சிய போதே அவருக்கு இணையாக முன்னேறி பேசப்பட்டவர். துவக்கம் முதலே பக்தி, காதல், தாய் பாசம், தத்துவம் என பல சூழ்நிலைகளுக்கும் பாடல்களை எழுதியவர்.

இவர் எழுதிய பல பாடல்களை கண்ணதாசன்தான் எழுதினார் என பலரும் நினைத்தனர். கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே மனஸ்தாபம் வந்து பிரிந்த போது எம்.ஜி.ஆரின் அனைத்து படங்களுக்கும் வாலியே பாடல்களை எழுதினார். எம்.ஜி.ஆர் படத்தில் வாலி எழுதிய ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்.. ஏன் என்ற கேள்வி..’ போன்ற பல பாடல்கள் எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கைக்கும் உறுதுணையாக அமைந்தது.

இதையும் படிங்க: உங்களாலதான் படம் ரிலீஸாகவே இல்ல!. வாலியிடம் கோபப்பட்ட எம்.ஜி.ஆர்.. நடந்தது இதுதான்!..

வாலி மிகவும் கோபக்காரரும் கூட. எம்.ஜி.ஆரிடமே அவர் கோபித்துகொண்ட சம்பவங்களும் நடந்துள்ளது. அதன்பின் எம்.ஜி.ஆரே அவரை சமாதனம் செய்திருக்கிறார். ஒருமுறை வாலியின் மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் இருந்தபோது அங்கே இருந்தார் வாலி. எம்ஜிஆர் படத்திற்கு அவசரமாக ஒரு பாடல் தேவைப்பட்டது. வாலியை தொடர்பு கொண்ட தயாரிப்பாளர் அவரை பாடல் எழுத அழைக்க வாலி சூழ்நிலையை விளக்கியுள்ளார்.

அதற்கு தயாரிப்பாளர் ’நீ என்ன ஆபரேஷனை செய்ய போகிறாய்?’ என கேட்க கோபமடைந்த வாலி ‘உன் காசே எனக்கு வேணாம். போனை வைடா’ என சொல்லிவிட்டார். அடுத்தநாள் குழந்தையை பார்க்க வந்த எம்.ஜி.ஆர் ‘அவர் பேசியது தவறு.. உங்கள் கோபம் நியாயமானது.. எனக்கு பாடல் வேண்டும். எப்போது முடியுமோ எழுதி கொடுங்கள்’ என சொன்னாராம்.

இதையும் படிங்க: எல்லா பாட்டும் எழுதினது நான்! ஆனா பேரு யாருக்கு தெரியுமா? ரஜினி படத்தில் நடந்த குளறுபடிய சொன்ன வாலி

அதேபோல், கலைஞர் கருணாநிதியின் தயாரிப்பில் இராமநாராயணன் ஒரு படத்தை இயக்கினார். ஒரு பாம்பு வரும் காட்சிக்கு பாடல் எழுத ‘உனக்கு எல்லா நாகத்துக்கும் நான் பாடல் எழுதிட்டேன்.. இனிமே துத்த நாகம் ஒன்னுதான் பாக்கி’ என வாலி சொன்னாராம். அந்த பட விழாவில் பேசிய இன்னொரு கவிஞர் ‘நான் துத்த நாகதுக்கெல்லாம் பாட்டு எழுத மாட்டேன்’ என சொல்ல வாலிக்கு கோபம் வந்துவிட்டது. இந்த படத்துக்கு நான் பாட்டு எழுத மாட்டேன் என சொல்லிவிட்டாராம்.

அதன்பின் தொலைப்பேசியில் வாலியை அழைத்த கலைஞர் கருணாநிதி ‘உங்கள் கோபம் நீயாயமானது. எனக்கு அந்த பாட்டை எழுதி கொடுங்கள்’ என கேட்டாரம். இதை ஊடகம் ஒன்றில் பகிர்ந்து கொண்ட வாலி ‘இந்த விஷயத்தில் எம்.ஜி.ஆரும், கலைஞரும் ஒரே மாதிரி என்னிடம் பேசினார்கள்’ என கூறினார்.

இதையும் படிங்க: நடிப்பை பார்த்து வாலி அடித்த கமெண்ட்!.. எம்.ஜி.ஆருக்கு வந்த கோபம்!.. அடுத்து நடந்ததுதான் ஹைலைட்!..

Tags:    

Similar News