Connect with us

Cinema History

நடிப்பை பார்த்து வாலி அடித்த கமெண்ட்!.. எம்.ஜி.ஆருக்கு வந்த கோபம்!.. அடுத்து நடந்ததுதான் ஹைலைட்!..

1960களில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர் எம்.ஜி.ஆர். பல வருடங்கள் நாடகங்களில் நடித்த அனுபவம் இருந்தாலும் சினிமாவில் சுலபமாக வாய்ப்பு கிடைக்காமல் பல வருடங்கள் போராடித்தான் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

மல்யுத்தம், வாள் வீச்சு, கத்தி சண்டை, குதியேற்றம் என எல்லாமே எம்.ஜி.ஆருக்கு தெரியும் என்பதால் தொடந்து ஆக்‌ஷன் கதைகளில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். துவக்கத்தில் நடிப்புக்கு தீனி போடும் பல கதைகளில் நடித்து எம்.ஜி.ஆர் ஒரு கட்டத்தில் அதை விட்டுவிட்டு சமூக பிரச்சனைகளை பேசும் படங்களில் நடிக்க துவங்கினார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் செய்த உதவியால் ஜீரோ டூ ஹீரோவான நடிகர்… இப்போ டாப் சூப்பர்ஸ்டாரின் மாமனாராம்..! அட..!

எம்.ஜி.ஆரின் பல திரைப்படங்களில் பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி. கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே இருந்த உறவில் விரிசல் ஏற்பட்டபோது வாலியை தனது படங்களுக்கு பாடல் எழுத வைத்தார் எம்.ஜி.ஆர். ஒருமுறை எம்.ஜி.ஆர் நடிக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்பில் வாலி இருந்தார்.

பைத்தியக்காரன் வேடத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர் கோவிலில் இருக்கும் ஒரு பெண்ணின் தலையில் உள்ள மல்லிகை பூவை பிய்த்து சாப்பிடுவது போல காட்சி எடுக்கப்பட்டது. அந்த காட்சியில் நடித்துவிட்டு வந்ததும் வாலியை பார்த்த எம்.ஜி.ஆர் ‘நான் நடித்ததில் உங்களுக்கு திருப்தி இல்லையா?’ என கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: கலைஞர் மகனுக்கு வாலி எழுதிய பாடல்!.. கடுப்பாகி எம்.ஜி.ஆர் கேட்ட அந்த கேள்வி…

அதற்கு வாலி ‘ஆமாம்னே. நீங்க இன்னும் கொஞ்சம் வேகமா நிறைய பூக்களை பிய்த்து திண்ணிருக்கலாம்’ என சொல்ல கோபமடைந்த எம்.ஜி.ஆர் ‘யோ.. மல்லிகப்பூவ சாப்பிட்டு பாத்திருக்கியா.. அது எட்டிக்காய் போல கசக்கும்’ என சொல்லிவிட்டு அறைக்குள்ளே வேகமாகபோய்விட்டார்.

எம்.ஜி.ஆரை கோபப்படுத்தி விட்டோமே என பதறிய வாலி அறைக்குள் சென்று அவரை சமாதானப்படுத்த முயன்றுள்ளார். அதற்கு எம்.ஜி.ஆர் ‘ நீங்கள் சொல்வது சரிதான்.. மல்லிகைப்பூதானே கசக்கும்.. ரோஜாப்பூவை வைத்து எடுக்கலாமே’ என சொல்லி அதே காட்சியில் மீண்டும் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: ‘உலகம் சுற்று வாலிபன்’ மாதிரி எடுக்க நினைத்து மொக்க வாங்கிய விஷால் படம்! இதெல்லாம் நடக்குற காரியமா?

google news
Continue Reading

More in Cinema History

To Top