Connect with us
vishal

Cinema News

‘உலகம் சுற்று வாலிபன்’ மாதிரி எடுக்க நினைத்து மொக்க வாங்கிய விஷால் படம்! இதெல்லாம் நடக்குற காரியமா?

Vishal Movie: தமிழ் சினிமாவில் புரட்சித்தளபதியாக வலம் வருபவர் நடிகர் விஷால். தொடர்ந்து தோல்விப் படங்களையே கொடுத்து வந்த விஷால் சமீபத்தில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்திருக்கிறார். அடுத்ததாக இயக்குனர் ஹரியுடன் ஒரு புதிய படத்தில் இணைந்திருக்கிறார் விஷால்.

மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு முன்பு வரை பல படங்களில் நடித்திருந்தாலும் அந்தப் படங்கள் எதுவுமே மக்களை அந்தளவுக்கு திருப்திப்படுத்தவில்லை. அதிலும் குறிப்பாக ஆக்‌ஷன் என்ற திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்.

இதையும் படிங்க: எம்ஜிஆரை இதுவரை இப்படி யாரும் புகழ்ந்திருக்க மாட்டாங்க! போட்டி இருந்தாலும் உண்மையான பாசத்தை காட்டிய கலைஞர்

ஆனால் மிகப்பெரிய அளவில் வணிக ரீதியாக தோல்வியடைந்த படமாக அமைந்தது.இந்தப் படம் குறித்து அந்தப் படத்தின் தயாரிப்பாளரான ரவீந்திரன் ஒரு பேட்டியில் கூறினார். அதாவது ஆக்‌ஷன் படத்தின் தோல்விக்கு நான்தான் முக்கிய காரணம், அந்தப் படத்தை கையில் எடுத்தேன் பாருங்கள். அது நான் பண்ணியிருக்கவே கூடாது என்று கூறினார்.

படத்தின் இயக்குனர் சுந்தர்.சி ரவீந்திரனிடம் உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று கூறியதாகவும் அதற்காக ஒரு ஒன் லைன் கதையை சொல்லி ரவீந்திரனிடம் சம்மதம் பெற்றதாகவும் ரவீந்திரன் கூறினார். மேலும் சுந்தர்.சியிடம் ரவீந்திரன் ‘உங்க மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தயாரிப்பாளருக்கு இதுவரை நஷ்டத்தை கொடுக்காத இயக்குனர் நீங்கள். இந்தப் படத்திற்காக 7 நாடுகளில் படப்பிடிப்பு வைக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்’

இதையும் படிங்க: சைக்கோவா நீ…! மாலினி செய்த வேலையை பார்த்து கடுப்பான ரசிகர்கள்..! அதுக்கு தான் வெறும் பெட்டு போல..!

‘40 கோடி பட்ஜெட் வேற சொல்கிறீர்கள். எனக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. நீங்கள் படத்தை நன்றாக எடுத்துக் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்’ என்று ரவீந்திரன் சுந்தர்.சியிடம் கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஹிந்தியிலும் சாட்டிலைட்டிலும் பெரிய அளவுக்கு படத்தை விற்றுக் கொடுத்திருக்கிறார் ரவீந்திரன்.

கடைசியில் படத்தில் கதையே இல்லை என்று சொல்லி இப்போது ரவீந்திரன் ஆக்ஷன் படத்தை பற்றி தன்னுடைய அனுபவத்தை கூறினார்.

இதையும் படிங்க: நிஜத்திலும் வில்லன்தான்.. ஜெயிலர் பட வில்லன் கைது!.. அவர் செஞ்சதுதான் ஹைலைட்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top