Connect with us
vinayak

Cinema News

நிஜத்திலும் வில்லன்தான்.. ஜெயிலர் பட வில்லன் கைது!.. அவர் செஞ்சதுதான் ஹைலைட்!..

Actor vinayak: ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்தவர் வினாயகன். இவர் கேரளாவை சேர்ந்தவர் பல மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஷாலுக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்த திமிறு படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ‘யாருடா இவரு?’ என ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்தவர்.

இவர் ஒரு பாடகரும் கூட. பல திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதையும் பெற்றிருக்கிறார். இவர் மாந்திரீகம் என்கிற மலையாள திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் நடிக்க துவங்கினார். பஹத் பாஷில் நடிப்பில் ரசிகர்களால் பாராட்டப்பட்ட ட்ரான்ஸ் படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார்.

நெல்சனின் இயக்கத்தில் ரஜினி நடித்து சூப்பர் ஹிட் அடித்த ஜெயிலர் படத்தில் முக்கிய வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். அவரை பார்க்கும்போதே பயம்வரும்படியான தோற்றத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை பயமுறுத்தினார். தமிழும், மலையாளமும் கலந்த கலவையாக அவர் பேசும் ஸ்டைலே தனி.

இவர் சினிமாவில் மட்டுமில்லை. நிஜ வாழ்விலும் வில்லன்தான். இவர் மீது பல புகார்களும் உண்டு. அவ்வப்போது அடாவடி செய்து பிரச்சனையில் சிக்குவார். இந்நிலையில், நேற்று மதுபோதையில் போலீசாரிடமே தகராறு செய்துள்ளார். எனவே, போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். காவல் நிலையத்தில் கைகட்டி அவர் நிற்கும் வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மதுபோதையில் பக்கத்து வீட்டுக்காரரிடம் அவர் பிரச்சனை செய்ததால் அவர்கள் அளித்த பேரில் காவல் அதிகாரிகள் அவரின் வீட்டுக்கு போய் விசாரணை செய்தபோது காவல் அதிகாரி ஒருவரை அவர் தாக்கியதாக சொல்லப்படுகிறது.  எனவே, போலீசார் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவருக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.

google news
Continue Reading

More in Cinema News

To Top