எம்.ஜி.ஆர் செய்த உதவியால் ஜீரோ டூ ஹீரோவான நடிகர்… இப்போ டாப் சூப்பர்ஸ்டாரின் மாமனாராம்..! அட..!

MGR: தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் எப்போதுமே தன்னுடைய சகாக்களுக்கு உதவி என்றால் முதல் ஆளாக இருப்பார். அப்படி அவர் செய்த உதவிகளின் லிஸ்ட் எக்கசக்கம். அப்படி ஒரு நடிகரின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிய பெருமையும் எம்.ஜி.ஆருக்கு இருக்கிறது.

அவ்வையார் படத்தில் சின்ன வேடத்தில் நடித்து சினிமாவுக்கு வந்தவர் நடிகர் பாலாஜி. பின்னர் ஹீரோவாக சில படங்கள் நடித்தவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம். அதை தொடர்ந்து வில்லனாக சில படங்களில் நடித்தார்.

பாலாஜிக்கும், எம்.ஜி.ஆருக்கும் எப்போதுமே இணை பிரியாத நட்பு ஒன்று இருக்குமாம். எம்.ஜி.ஆர் செய்த ஒரு உதவியால் தான் அவரின் வாழ்க்கையே அடியோடு மாறியது என்கின்றனர். ஒரு கட்டத்தில் பாலாஜிக்கு வாய்ப்பே இல்லை.

இதையும் படிங்க: டைட்டிலில் சொந்த பெயரை கூட போட முடியாத சோகம்!.. எம்.ஜி.ஆருக்கு போட்டியாக வந்த காமெடி நடிகர்!..

விடிந்தால் தீபாவளி கையில் காசு இல்லாமல் ரோட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் நடந்து போய்க்கொண்டு இருந்தாராம். அப்போது அவருக்கு முன்னால் ஒரு கார் வந்து நின்று இருக்கிறது. அதில் ஜானகியும், எம்.ஜி.ஆரும் இருந்து இருக்கின்றனர்.

இவரை பார்த்து நலம் விசாரித்தவர். போகும் போது கையில் ஒரு கவரை திணித்து விட்டு கிளம்பிவிட்டாராம். அதை பிரித்தவருக்கு ஆச்சரியம் புத்தம் புதிய 10 நூறு ரூபாய் நோட்டு கட்டு இருந்ததாம். அதுவும் இன்றைய காலத்துக்கு அது 2.5 லட்சம் வரை மதிப்பு தரும்.

இதையும் படிங்க: சூப்பர் ஜோடி! இணையத்தை தெறிக்கவிட்ட புகைப்படம் – ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்த சிவாங்கி

உடனே தன்னுடைய குடும்பத்துக்கு ட்ரெஸ் எடுத்துவிட்டு கடனையெல்லாம் அடைத்து விட்டார். மீதி கையில் 3 நோட்டுகள் இருந்து இருக்கிறது. இதில் ஒன்றையாவது காப்பாத்தி விட வேண்டும் ஆசையில் இருந்தவர். தன்னுடைய பர்ஸில் அந்த நோட்டை வைத்து எம்.ஜி.ஆர் பெயரையும் எழுதி வைத்தாராம்.

அதை தொடர்ந்து இவருக்கு வரிசையாக வாய்ப்புகள் குவிந்ததாம். பின்னர் தயாரிப்பாளராகவும் உருவெடுத்து பல படங்களையும் தயாரித்தார். இவரின் மகளை தான் மலையாள சினிமா உலகின் சூப்பர்ஸ்டார் மோகன்லால் கட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it