கமலுடன் மோதிய இயக்குனர்கள்!.. இவ்வளவு பேரா?... லிஸ்ட் பெரிசா போகுதே!..

by sankaran v |   ( Updated:2024-05-12 12:10:30  )
Kamal2
X

Kamal2

பாலசந்தர் தான் கமலின் குருநாதர். அவருக்கும் கமலுக்கும் கூட பிரச்சனை என்கிறார் பிரபல பத்திரிகைiயாளர் குமார். இது மட்டுமா இன்னும் அவர் கமலுடன் சண்டையிட்ட இயக்குனர்களின் பட்டியலைத் தந்துள்ளார். அடேங்கப்பா இவ்வளவு பேரா என்று ஆச்சரியமாக உள்ளது. வாங்க என்ன சொல்கிறார்னு பார்ப்போம்.

உன்னால் முடியும் தம்பி படத்தின் போது கமல் அபூர்வ சகோதரர்கள் படப்பிடிப்பில் பிசியாக இருந்தாராம். உன்னால் முடியும் தம்பி படத்திற்கு கமலின் டச்சப் வேலைகள் கொஞ்சம் பாக்கி இருந்ததாம். அதனால் பாலசந்தரின் அசிஸ்டண்ட்கள் அவ்வப்போது கமலிடம் இதுகுறித்து சந்திக்கச் சென்றார்களாம். அப்போது கமல், "அவரு வயலும் வாழ்வும் மாதிரி எப்பவாவது படம் எடுப்பாரு. அதுக்கு நான் போயி டச்சப் ஷாட் கொடுக்கணுமா"ன்னு கேட்டாராம்.

இதையும் படிங்க... மலையாள நடிகர்.. பாலிவுட் நடிகை!.. அடுத்த படத்துக்கு பக்கா ஸ்கெட்ச் போடும் சூர்யா…

அப்புறம் கொஞ்சம் லேட்டா நடிச்சிக் கொடுத்தாரு. அப்போ பாலசந்தர் கடைசிநாள்ல இதுதான் நம்மோட கடைசி அத்தியாயம்... இனி பிரண்ட்ஷிப்பாவே இருப்போம்னு சொன்னாராம். அதன்பிறகு பாலசந்தரின் இயக்கத்தில் கமல் நடிக்கவே இல்லை. ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது போய் பார்த்துள்ளார் கமல்.

ருத்ரய்யா இயக்கத்தில் ;அவள் அப்படித்தான்; படத்தில் கமல் நடித்தார். கிராமத்து அத்தியாயம் படத்தில் கமல் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது முடியாமல் போனது. அதன்பிறகு ராஜா உன் பார்வை படமும் பூஜைக்குப் பிறகு நின்று போனது. அதன்பிறகும் பல படங்கள் அவருக்கு இப்படி டிராப்பானது.

அதே போல தேவர்மகன் படத்திலும் மலையாள இயக்குனர் பரதன் உடன் கமலுக்குப் பிரச்சனை வந்ததாம். அந்தப் படத்திலும் கமலின் தலையீடு இருந்ததால் பாதியில் விட்டு விட்டுப் போய் விட்டாராம். அதன்பிறகு இளையராஜா தான் அவரை சமாதானப்படுத்தி திரும்ப அழைத்து வந்தாராம்.

அன்பே சிவம் படத்தை இயக்கியவர் சுந்தர்.சி. அவர் எப்போதும் காமெடி ஜானரில் தான் எடுப்பார். இந்தப் படத்தைப் பார்த்தால் கமலின் தலையீடு இருப்பதாகவே தெரிகிறது. அதனால் கூட கமலுடன் அதன்பிறகு இணைந்து பணியாற்றவில்லை என்று கூட சொல்லலாம்.

சுரேஷ் கிருஷ்ணா 'சத்யா' என்ற பெரிய சூப்பர்ஹிட் படத்தைக் கொடுத்தவர். ஆளவந்தான் படத்தையும் எடுத்தவர் அவர் தான். கமலின் தலையீடு 65 சதவீதம் இருக்க வாய்ப்புள்ளது. டெல்லி கணேஷ் கூட ஒரு பேட்டியில் ரஜினி வருவார். நடிப்பார். போயிடுவார். ஆனா, கமல் அப்படி கிடையாது. எப்படி பண்ணலாம், ஏது பண்ணலாம்னு எல்லா வியூவையும் பார்த்துட்டுத் தான் ஷெட்டை விட்டே கிளம்புவாராம்.

இதையும் படிங்க... எழுதிக் கொடுத்த எம்.ஜி.ஆர்!.. நெகிழ்ந்து போய் பேசமுடியாமல் நின்ற ஸ்ரீதர்!.. உரிமைக்குரல் உருவானது இப்படித்தான்!..

கே.எஸ்.ரவிகுமார் அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், தெனாலி என 3 படங்கள் வேலை செய்தார். பஞ்சதந்திரம் படத்துக்குப் பிறகு அவரால் வேலை செய்ய முடியவில்லை. அதே போல கௌதம் மேனன் வேட்டையாடு விளையாடு படத்தை இயக்கினார். அதன்பிறகு கமலுடன் இணையவில்லை. தற்போது உத்தமவில்லன் படத்தை எடுத்த லிங்குசாமியும் இந்த லிஸ்டில் இணைந்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story