எழுதிக் கொடுத்த எம்.ஜி.ஆர்!.. நெகிழ்ந்து போய் பேசமுடியாமல் நின்ற ஸ்ரீதர்!.. உரிமைக்குரல் உருவானது இப்படித்தான்!..

இயக்குனர் ஸ்ரீதர் என்றால் தமிழ்ப்பட உலகில் தவிர்க்க முடியாத இயக்குனர். அவரது படங்கள் பெரும்பாலும் சூப்பர்ஹிட் தான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக இருக்கும். அதுவரை எம்ஜிஆரை வைத்து படம் எதுவும் ஸ்ரீதர் இயக்கவில்லை. உரிமைக்குரல் தான் முதல் படம். அந்த வாய்ப்பு அவருக்கு எப்படி கிடைத்தது என்று பார்ப்போம்.

இயக்குனர் ஸ்ரீதர் ஒருமுறை எம்ஜிஆரைப் பார்த்து படம் சம்பந்தமாக சில விஷயங்களைப் பேசினாராம். அப்போது பொருளாதார ரீதியில் ஸ்ரீதர் பின்தங்கிய நிலையில் இருந்துள்ளார். ஆனால் அந்த நேரத்தில் அவர் அது எதையுமே எம்ஜிஆரிடம் காட்டிக்கொள்ளவில்லை. சினிமா குறித்து என்ன பேசவேண்டுமோ அதை மட்டும் பேசி விட்டு எழுந்து விட்டார். அப்போது, எம்ஜிஆர் ‘ஒரு நிமிடம் உட்காருங்க’ என்று சொல்ல, தயங்கியபடி ஸ்ரீதர் அமர்ந்துள்ளார்.

இதையும் படிங்க... ‘எஜமான்’ படத்தில் நடிக்க பயந்த ரஜினி!.. இவ்ளோ ரிஸ்க் எடுத்தா நடிச்சாரு?

எம்ஜிஆர் செயலாளரை அழைத்து உடனடியாக ஒரு கடிதம் எழுதச் சொல்கிறார். அதில் தன் கையெழுத்தைப் போட்டு ஸ்ரீதரிடம் கொடுக்கிறார். என்னவாக இருக்கும் என்ற ஆவலில் அதைப் படபடவென படிக்கிறார் ஸ்ரீதர்.

அந்தக் கடிதத்தில் நான் ஸ்ரீதருக்கு ஒரு படம் நடித்துக் கொடுக்க ஒப்புதல் அளிக்கிறேன். அவரது படத்துக்கு முன்னுரிமை தந்து 3 மாதங்களுக்குள் முடித்துத் தர சம்மதிக்கிறேன் என்று எழுதப்பட்டு இருந்ததாம். இதைப் படித்த ஸ்ரீதருக்கு என்ன நடக்கிறது என்றே நம்ப முடியவில்லை.

உணர்ச்சிவசப்பட்டுப் போனார். அவரது குரல் தழுதழுத்தது. ‘நீங்க வாய்மொழியாகச் சொன்னால் கூட போதுமே. எதுக்கு இந்த லட்டர்?’ என்று கேட்க, இது உங்களுக்காக அல்ல. பணம் கொடுக்கும் பைனான்சியர்களுக்காக என்றாராம் எம்ஜிஆர்.

இதையும் படிங்க... சத்யராஜ் செய்த அந்த உதவி… இப்படியும் ஒரு வள்ளலா என புகழ்ந்து தள்ளிய இயக்குனர்

இது பெரிய பட்ஜெட் படம். பணப்பற்றாக்குறையால் நீங்க கஷ்டப்படக்கூடாது. இந்தக் கடிதத்தைக் காட்டினால் பைனான்சியர்கள் பணம் தருவார்கள். அதுக்காகத் தான் இந்த கடிதம் என்றதும் ஸ்ரீதர் கண்கலங்கி என்ன செய்வது என்றே தெரியாமல் அப்படியே நின்றாராம்.

அதே போல எம்ஜிஆர் நடிக்கப் போகிறார் என்றதுமே விநியோகஸ்தர்களும், பைனான்சியர்களும் ஸ்ரீதரின் வீடு தேடி வந்து விட்டார்கள். படம் தயாராகும் முன்பே பணம் கிடைத்து விட்டது. அப்படி உருவானது தான் உரிமைக்குரல்.

அந்தப் படத்தில் கூட எம்ஜிஆரின் குணத்தைச் சொல்லும் பாடல் வரிகள் இப்படி வரும். ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில் என்ற அந்தப் பாடலின் இடையே, என் மனம் பொன் மனம் என்பதைக் காணலாம். நாளை அந்த வேளை வந்து என்னைச் சேரலாம் என்று. எம்ஜிஆரின் வாழ்க்கையில் அது நிஜமாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

 

Related Articles

Next Story