பிரபாஸ் - தீபிகா படுகோனே உடன் இணைந்த கமல்ஹாசன்?.. அடுத்த பான் இந்தியா சம்பவம் ரெடி
நடிகர் பிரபாஸ் - தீபிகா படுகோனே நடிக்கும் 'Project K' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளன. தெலுங்கு நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி’ சீரிஸ் படங்களின் வெற்றிக்கு பிறகு ஆக்சன் படமான 'சாஹோ' படத்தில் நடித்து இருந்தார். பின்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் காதலை மையமாக வைத்து 350 கோடி ரூபாய் செலவில், இயக்குனர் ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் வெளிவந்த 'ராதே ஷ்யாம்' படத்திலும் நடித்திருந்தார். ராதே ஷ்யாம் படத்தை அடுத்து நடிகை தீபிகா படுகோனின் […]
நடிகர் பிரபாஸ் - தீபிகா படுகோனே நடிக்கும் 'Project K' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளன.
தெலுங்கு நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி’ சீரிஸ் படங்களின் வெற்றிக்கு பிறகு ஆக்சன் படமான 'சாஹோ' படத்தில் நடித்து இருந்தார். பின்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் காதலை மையமாக வைத்து 350 கோடி ரூபாய் செலவில், இயக்குனர் ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் வெளிவந்த 'ராதே ஷ்யாம்' படத்திலும் நடித்திருந்தார்.
ராதே ஷ்யாம் படத்தை அடுத்து நடிகை தீபிகா படுகோனின் தெலுங்கு அறிமுக படமான, 'ப்ரோஜெக்ட் கே' படத்தில் நடித்து வருகிறார். தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் Project K படத்தினை வைஜெயந்தி மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர் அஸ்வினி தத் தயாரிக்கிறார்.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதி Project K திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் துவங்கியது. இதில் நடிகை தீபிகா படுகோன், பிரபாஸ் கலந்து கொண்டனர்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 3 கட்டங்களாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. இதில் தீபிகா படுகோன், பிரபாஸ், அமிதாப் பச்சன் சம்பந்தப்பட்ட ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டன.
அடுத்த கட்ட படப்பிடிப்பில் அமிதாப் பச்சன் கலந்து கொண்டார். பின்னர் மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் நடிகை திஷா பதானி கலந்து கொண்டார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.
இந்த ஆக்சன் காட்சிகளை பிரபல சண்டை பயிற்சி இயக்குனர்கள் அனபறிவ் மாஸ்டர்கள் வடிவமைத்துள்ளனர். சமீபத்தில் வெளியான கே ஜி எப் படங்களில் சண்டை காட்சிகளை வடிவமைத்தது இவர்கள் தான். KGF முதல் பாகத்திற்காக அன்பறிவ் இரட்டையர்கள் தேசிய விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மற்றும் ஹெச். வினோத் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கும் படத்துக்கு நடுவே இந்த படத்திலும் கமல் நடிக்க உள்ளார்.
இதற்கிடையில் நடிகர் பிரபாஸ், 'ஆதி புருஷ்' மற்றும் கேஜிஎஃப் இயக்குனருடன் இணையும் 'சலார்', சந்திப் ரெட்டி வாங்காவுடன் 'ஸ்பிரிட்' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இதில் ஆதி புருஷ் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.