ஹிட் இயக்குனர்களுக்கு கொக்கிப் போடும் கார்த்தி… ரொம்ப உஷாரா இருக்காரே!!
தமிழின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் கார்த்தி, தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் தனது யதார்த்த நடிப்பால் பலரையும் கவர்ந்து வருகிறார் கார்த்தி. சமீபத்தில் வெளிவந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் கூட வந்தியத்தேவனாக வந்து ரசிகர்களை மகிழ்வித்தார். அக்கதாப்பாத்திரத்தில் கார்த்தி மிகவும் கச்சிதமாக பொருந்தியுள்ளதாக பலரும் பாராட்டி வந்தனர். “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தை தொடர்ந்து கடந்த தீபாவளியை முன்னிட்டு “சர்தார்” திரைப்படம் வெளியானது. மிகவும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட […]
தமிழின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் கார்த்தி, தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் தனது யதார்த்த நடிப்பால் பலரையும் கவர்ந்து வருகிறார் கார்த்தி.
சமீபத்தில் வெளிவந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் கூட வந்தியத்தேவனாக வந்து ரசிகர்களை மகிழ்வித்தார். அக்கதாப்பாத்திரத்தில் கார்த்தி மிகவும் கச்சிதமாக பொருந்தியுள்ளதாக பலரும் பாராட்டி வந்தனர்.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தை தொடர்ந்து கடந்த தீபாவளியை முன்னிட்டு “சர்தார்” திரைப்படம் வெளியானது. மிகவும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட இத்திரைப்படம் தீபாவளி ரேஸில் மாபெரும் வெற்றி பெற்றது. கார்த்தி இரண்டு வேடங்களில் கலக்கி எடுத்திருந்தார். மேலும் “சர்தார்” திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
“சர்தார்” திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்தில் “ஜப்பான்” என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்தது. மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாக ஒரு சூடான தகவல் வெளிவந்துள்ளது.
அருண்ராஜா காமராஜ் இதற்கு முன் “கனா”, “நெஞ்சுக்கு நீதி” போன்ற வெற்றித்திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் தற்போது ஹாட்ஸ்டாரில் ஒரு வெப் சீரீஸை இயக்குவதற்கும் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த நிலையில்தான் கார்த்தியை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க உள்ளாராம். ராஜு முருகனின் “ஜப்பான்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு அருண்ராஜா காமராஜ் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.