அய்யோ பாலாவா?...ஆள உடுங்க!.. தெறித்து ஓடும் கீர்த்தி சுரேஷ்...

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் ஆகிய படங்கள் வந்த போது பாலா பெரிய இயக்குனராக பார்க்கப்பட்டார். ஆனால், அவன் இவன், தாரை தப்படை என தொடர்ந்து பிளாப் படங்கள் கொடுத்து பெயரை கெடுத்து கொண்டார். அதோடு, விக்ரம் மகன் துருவை வைத்து அவர் இயக்கிய வர்மா திரைப்படத்தை ரிலீஸ் செய்யாமலே வேறு இயக்குனரை வைத்து எடுத்து அவரை அசிங்கப்படுத்தினர். எனவே, எப்படியாவது ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய நிலையில் பாலா இருக்கிறார். பெரிய ஹீரோக்கள் யாரும் […]

Update: 2021-11-18 07:11 GMT

keerthi

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் ஆகிய படங்கள் வந்த போது பாலா பெரிய இயக்குனராக பார்க்கப்பட்டார். ஆனால், அவன் இவன், தாரை தப்படை என தொடர்ந்து பிளாப் படங்கள் கொடுத்து பெயரை கெடுத்து கொண்டார். அதோடு, விக்ரம் மகன் துருவை வைத்து அவர் இயக்கிய வர்மா திரைப்படத்தை ரிலீஸ் செய்யாமலே வேறு இயக்குனரை வைத்து எடுத்து அவரை அசிங்கப்படுத்தினர்.

எனவே, எப்படியாவது ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய நிலையில் பாலா இருக்கிறார். பெரிய ஹீரோக்கள் யாரும் அவர் படத்தில் நடிக்க யோசிக்கும் நிலையில், சூர்யா அவருக்கு ஆதரவு கொடுத்தார். சூர்யாவும் அவரும் ஒரு புதிய படத்தில் இணைவதாக சமீபத்தில் அறிவித்தனர். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவுள்ளது. இப்படத்தை சூர்யாவே தனது 2டி நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என கருதிய பாலா அவரை அணுகியுள்ளாராம். மேலும் தொடர்ச்சியாக 3 மாதம் கால்ஷிட் கொடுக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளாராம். பாலா படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை கீர்த்தி சுரேஷுக்கு வந்தாலும், சற்று யோசிக்கிறாராம். ஏனெனில், பாலா 3 மாதம் என்பார் ஆனால் 6 மாதம் இழுத்து விடுவார். அப்படி நடந்தால் மற்ற படங்களில் நடிக்க முடியாமல் போய்விடும். அதோடு, படப்பிடிப்பில் கடுமையாக நடந்து கொள்வார் பாலா. எனவே, சரிவருமா என யோசித்து வருகிறாராம்.

பாலா படத்துக்கு அவர் சம்மதம் தெரிவிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags:    

Similar News