விஜய்க்கு ஜோடியாக நான் நடிக்கவில்லை.. வதந்தியை உடைத்த நடிகை!!

தமிழ் சினிமாவில் முன்னணி இருப்பவர் நடிகர் விஜய். சமீபத்தில் இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் 100 கோடிக்கும் மேல் வசூலித்து வசூலில் சாதனை படைத்து வருகின்றது. இதனால் இவரைத்தேடி கோலிவுட் மட்டுமல்லாது டோலிவுட்டிலிருந்தும் தயாரிப்பாளர்கள் வருகின்றனர். கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான சில படங்கள் அனைத்து தரப்பு மக்களையும் திருப்தி படுத்தவில்லை. இதையடுத்து விஜய் தனது அடுத்தடுத்த படங்களில் மிகவும் கவனமாக இருக்கிறார். இந்நிலையில் தற்போது அவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துவருகிறார். […]

Update: 2021-12-17 02:58 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி இருப்பவர் நடிகர் விஜய். சமீபத்தில் இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் 100 கோடிக்கும் மேல் வசூலித்து வசூலில் சாதனை படைத்து வருகின்றது. இதனால் இவரைத்தேடி கோலிவுட் மட்டுமல்லாது டோலிவுட்டிலிருந்தும் தயாரிப்பாளர்கள் வருகின்றனர்.

கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான சில படங்கள் அனைத்து தரப்பு மக்களையும் திருப்தி படுத்தவில்லை. இதையடுத்து விஜய் தனது அடுத்தடுத்த படங்களில் மிகவும் கவனமாக இருக்கிறார். இந்நிலையில் தற்போது அவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துவருகிறார்.

இப்படத்தில் விஜய்யுடன் முதன்முறையாக இணைந்து நாயகியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. படம் அடுத்த கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

keerthi suresh

இப்படத்தையடுத்து விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார். பான் இந்தியா படமாக உருவாக உள்ள இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் இதுகுறித்து கீர்த்தியிடம் கேள்வி கேட்டபோது, நான் தளபதி 66 படத்தில் நடிக்கவில்லை என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இவர் ஏற்கனவே விஜய்யுடன் இணைந்து பைரவா, சர்கார் ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News