சம்பளம்லாம் தர முடியாது- காமெடி நடிகரை அநியாயமாக ஏமாற்றிய சந்தானம்…

சந்தானம் விஜய் தொலைக்காட்சியில் “லொள்ளு சபா” நிகழ்ச்சியில் நடித்துக்கொண்டிருந்தபோதே மிகவும் பிரபலமான நடிகராக இருந்தார். அதன் பின் சினிமாவில் சிறு சிறு காமெடி வேடங்களில் நடித்து வந்த சந்தானம், ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார். அவரது கவுண்ட்டர் வசனங்களுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உருவானது. அவரது காமெடிகளுக்காகவே அவர் நடித்த திரைப்படத்தை பார்க்கத் தொடங்கினார்கள். அந்தளவுக்கு ரசிகர்களின் மனதில் ஒரு நீங்கா இடம்பிடித்திருந்தார் சந்தானம். எனினும் ஒரு காலகட்டத்தில் சந்தானம் […]

Update: 2023-04-17 02:43 GMT

Santhanam

சந்தானம் விஜய் தொலைக்காட்சியில் “லொள்ளு சபா” நிகழ்ச்சியில் நடித்துக்கொண்டிருந்தபோதே மிகவும் பிரபலமான நடிகராக இருந்தார். அதன் பின் சினிமாவில் சிறு சிறு காமெடி வேடங்களில் நடித்து வந்த சந்தானம், ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார். அவரது கவுண்ட்டர் வசனங்களுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உருவானது. அவரது காமெடிகளுக்காகவே அவர் நடித்த திரைப்படத்தை பார்க்கத் தொடங்கினார்கள். அந்தளவுக்கு ரசிகர்களின் மனதில் ஒரு நீங்கா இடம்பிடித்திருந்தார் சந்தானம்.

எனினும் ஒரு காலகட்டத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். அவர் கதாநாயகனாக நடித்த “அறை எண் 305-ல் கடவுள்”, “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” போன்ற திரைப்படங்கள் ஓரளவு நல்ல வரவேற்பை பெற தொடங்கிய பின் தொடர்ந்து பல திரைப்படங்களில் சந்தானம் ஹீரோவாக நடித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் சீரியஸ் ஹீரோவாக களமிறங்கினார். அதன் விளைவாக “குலுகுலு”, “ஏஜெண்ட் கண்ணாயிரம்” ஆகிய திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை. தற்போது “கிக்”, “வடக்குப்பட்டி ராமசாமி” ஆகிய திரைப்படங்களில் சந்தானம் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக திகழ்ந்து வரும் கிங்காங் ஷங்கர், சந்தானம் திரைப்படத்தில் ஏமாற்றப்பட்ட ஒரு சோக சம்பவத்தை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது சமீபத்தில் சந்தானம் நடித்து வரும் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஒரு சிறு நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் கிங்காங் ஷங்கர் நடித்திருக்கிறார். அவரது கதாப்பாத்திரத்தை ஒரு நாளில் படமாக்கி முடித்துவிட்டார்கள். ஆனால் பல நாட்களாகியும் அவர் நடித்ததற்கான சம்பளம் வரவில்லையாம்.

ஆதலால் படக்குழுவினரிடம் தனது சம்பளத்தை கேட்டிருக்கிறார். ஆனால் அவர்களோ கிங்காங் ஷங்கரிடம், “நீங்கள் எங்கள் திரைப்படத்தில் நடிக்கவே இல்லையே” என கூறியிருக்கிறார்கள். அதற்கு கிங்காங் ஷங்கர் அவர் நடித்ததற்கான ஆதாரத்தை காட்டியுள்ளார். அப்படியும் அவருக்கு சம்பளம் தரவில்லையாம். இந்த சம்பவத்தை மிகவும் வேதனையோடு பகிர்ந்துகொண்டுள்ளார் கிங்காங் ஷங்கர்.

இதையும் படிங்க: விஜய்க்கு இந்தளவுக்கு ஈகோ இருக்கா? என்ன இருந்தாலும் இப்படியா பண்றது…

Tags:    

Similar News