KPY பாலாவின் திருமணத்திற்கு வந்த திடீர் சிக்கல்!.. அட இவருக்கா இப்படி நடக்கணும்!..

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் பாலா. கல்லூரி படிப்புக்கு பின் டிவி நிகழ்ச்சிக்கு போனவர். தன்னிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வுக்கு இதுதான் சரியான முடிவு என முடிவெடுத்தவர் இவர். இவருக்கு வெட்டுக்கிளி பாலா என்கிற பெயரும் உண்டு. ஆங்கர் அமுதவாணன் மூலம் சென்னை வந்த இவர் விஜய் டிவிக்குள் புகுந்தார். கலக்கப் போவது யாரு 6வது சீசன் வின்னராகவும் பாலா மாறினார். சூப்பர் சிங்கர் 7 சீசன் நிகழ்ச்சியிலும் […]

Update: 2024-04-12 00:15 GMT

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் பாலா. கல்லூரி படிப்புக்கு பின் டிவி நிகழ்ச்சிக்கு போனவர். தன்னிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வுக்கு இதுதான் சரியான முடிவு என முடிவெடுத்தவர் இவர். இவருக்கு வெட்டுக்கிளி பாலா என்கிற பெயரும் உண்டு.

ஆங்கர் அமுதவாணன் மூலம் சென்னை வந்த இவர் விஜய் டிவிக்குள் புகுந்தார். கலக்கப் போவது யாரு 6வது சீசன் வின்னராகவும் பாலா மாறினார். சூப்பர் சிங்கர் 7 சீசன் நிகழ்ச்சியிலும் காமெடி செய்து வந்தார். பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவரை மிகவும் பிரபலப்படுத்தியது.

இதையும் படிங்க: அக்‌ஷய் குமாருக்கு இந்த முறையும் வசூலில் பலத்த அடி!.. அடுத்து சூர்யா படம் என்ன ஆகப்போகுதோ..

இதன் காரணமாக சினிமாவில் நடிக்க துவங்கினார் பாலா. ஜுங்கா, தும்பா, லாபம், ஃபிரண்ட்ஷிப், நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளிட்ட பல படங்களிலும் காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறார். சம்பாதிப்பதில் பெரும் பங்கு மற்றவர்களுக்கு உதவுவதில் செலவழித்து வருகிறார். இதுதான், இவரை ஒரு மனிதநேயமிக்க இளைஞராக மக்களிடம் அடையாளம் காட்டி இருக்கிறது.

மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, உடல் ஊனமுற்றவர்களுக்கு வண்டி வாங்கி கொடுப்பது, கஷ்டப்படும் பெண்களுக்கு ஆட்டோ வாங்கி கொடுப்பது என பல உதவிகளையும் பாலா தொடர்ந்து செய்து வருகிறார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களையும் தனது சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: அடடா மழைடா!.. தமன்னா எப்படி இருக்காரு பாருங்க!.. பையா 2 ஸ்டார்ட் பண்ற வழிய பாருங்க லிங்குசாமி!..

வெள்ளம் வந்து சென்னையில் பல பகுதியில் நீரில் மூழ்கிய போது சில பகுதிகளுக்கு சென்று உதவிகள் செய்தார். தனது வங்கி கணக்கில் இருந்த எல்லா பணத்தையும் எடுத்து வீட்டுக்கு 1000 ரூபாய் கொடுத்தார். தற்போது நடிகர் லாரன்ஸுடன் இணைந்து பல உதவிகளை செய்து வருகிறார். பாலாவின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால், இப்போது இதுவே அவருக்கு சிக்கலை கொண்டு வந்திருக்கிறது.

கடந்த சில வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வருகிறார் பாலா. விரைவில் இவருக்கு திருமணமும் நடக்கவிருந்தது. ஆனால், ‘சம்பாதிப்பதை எல்லாம் மற்றவர்களுக்கு கொடுக்கும் இந்த பையன் நம்ம பொண்ணை எப்படி காப்பாத்துவான்?’ என்கிற கேள்வி பெண் வீட்டில் எழுந்துள்ளதாம். இதனால், என்ன முடிவெடுப்பது என்பதை யோசித்து வருகிறார்களாம். அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் பாலா ஈடுபட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

Tags:    

Similar News