கமல்-ரஜினி படங்களில் கலக்கிய நகைச்சுவை நடிகர் இவர் தான்!

கமல்-ரஜினி படங்களில் கலக்கிய நகைச்சுவை நடிகர் இவர் தான்!

;

By :  adminram
Published On 2021-08-19 00:05 IST   |   Updated On 2021-08-19 00:05:00 IST

நகைச்சுவை நடிகர், நாடக நடிகர், எழுத்தாளர் என பன்முகத்திறமை கொண்டவர் ஒய்.ஜி.மகேந்திரன். இவர் சென்னையில் ஒய்.ஜி.பார்த்தசாரதி - ராஜலெட்சுமி தம்பதியினருக்கு 9.1.1950ல் மகனாகப் பிறந்தார். இவரது தாயார் சென்னையில் உள்ள பிரபல பத்மா சேஷாத்ரி பள்ளியின் நிறுவனர்.

இவர் நடிகர் ரஜினிகாந்த், நடிகை வைஜெயந்திமாலா ஆகியோரின் நெருங்கிய உறவினர். இவரது குரல் தான் இவருக்கு பிளஸ் பாயிண்ட். அதாவது இவர் பேசும்போது மூக்கால் பேசுவது போல இருக்கும். நாடகங்களில் இவர் பெரிய ஜாம்பவான்.

சிரிக்காமல் சிரிப்பூட்டுபவர். இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் நூற்றுக்கு நூறு என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார்.

குறிப்பாக கமல், ரஜினி நடித்த பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். போக்கிரி ராஜா, பாயும்புலி, ஸ்ரீராகவேந்திரா, அபூர்வ ராகங்கள், நீயா, குரு, சகலகலா வல்லவன், எல்லாம் இன்பமயம், உயர்ந்த உள்ளம், முரட்டுக்காளை ஆகிய படங்களில் இவர் நடித்தவை ஏராளம். இவர் நடித்த படங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

சகலகலா வல்லவன்

1982ல் பஞ்சு அருணாசலம் கதை எழுத எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான படம். கமல், அம்பிகா, வி.கே.ராமசாமி, சில்க், ஒய்.ஜி.மகேந்திரன், ரவீந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் பூனை கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார். இவர் வரும்போது மியாவ் ...மியாவ்.. என சத்தம் போட்டுக்கொண்டே டயலாக் பேசி சிரிப்பூட்டுவார். இப்படத்தின் பாடல்கள் இளையராஜாவின் இன்னிசையில் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பின. இளமை இதோ இதோ, நிலா காயுது, அம்மன் கோவில் கிழக்காலே, நேத்து ராத்திரி, கட்டவண்டி கட்டவண்டி ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

போக்கிரி ராஜா

1982ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, ராதிகா மற்றும் ஒய்.ஜி.மகேந்திரன் நடிப்பில் வெளியான படம். எம்.எஸ்.விஸ்வநாதன். இசை ஏகம் ரத்னம் தயாரிப்பில் வெளியான படம். ஏவிஎம் தயாரிப்பில் பஞ்சு அருணாசலம் கதை எழுதினார். கடவுள் படைச்சான், போக்கிரிக்கி போக்கிரி ராஜா, வாடா என் மச்சிகளா, விடிய விடிய சொல்லி ஆகிய தெவிட்டாத தேன் போன்ற பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

நீயா

1979ல் துரை இயக்கத்தில் வெளியான படம். சங்கர் கணேஷ் இசை அமைக்க கமல், ஸ்ரீபிரியா, லதா, தீபா, விஜயகுமார், மஞ்சுளா, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் மார்ட்டின் என்ற சிறப்புத் தோற்றத்தில் படத்தில் நடித்துள்ளார்.

ஒரே ஜீவன், உன்னை எத்தனை, ஒரு கோடி, நான் கட்டில் மேலே கண்டேன் ஆகிய தேனான பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றன. ஒரே ஜீவன், உன்னை எத்தனை நாள், ஒரு கொடி, நான் கட்டில் மேலே கண்டேன் ஆகிய பாடல்களைக் கொண்டது.

உயர்ந்த உள்ளம்

1985ல் வெளியான இப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். கமல், அம்பிகா, ராதாரவி, வி.கே.ராமசாமி, ஒய்.ஜி.மகேந்திரன்; உள்பட பலர் நடித்தனர். ஏவிஎம் தயாரிப்பில் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் சூப்பர். ஒய்.ஜி.மகேந்திரன் காமெடி ஆக்டராக கலக்கியிருப்பார். எங்கே என் ஜீவனே, காலை தென்றல், ஓட்ட சட்டிய, வந்தால் மகாலெட்சுமி, என்ன வேணும்? ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

Similar News