அந்த மூணு விஷயம் இருந்தா தான் நான் நடிப்பேன்... டாப் ஸ்டார் என்ன சொல்ல வர்றாரு?

பிரசாந்தின் 90 கால படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர்ஹிட் தான். அதிலும் முதல் படம் கல்லூரி இளசுகளையும் கட் அடிக்க வைத்து விட்டது.

Update: 2024-08-07 13:00 GMT

நடிகர் பிரசாந்த் நடித்த முதல் படம் வைகாசி பொறந்தாச்சு. முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்புக்குள்ளானவர் பிரசாந்த் தான். ரசிகைகள் இவருக்கு அதிகம். எந்தக் கிசுகிசுவிலும் சிக்காதவர். இவரது பல படங்கள் பார்ப்பதற்கு ஒரு எனர்ஜியைத் தருவதாக இருக்கும்.

அந்த வகையில் இவருக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது இவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் அந்தகன் படம் அடுத்த வாரம் ரிலீஸாக உள்ளது. இந்தப் படம் இந்தியில் ஓடிய மாபெரும் வெற்றிப்படம். தமிழுக்கு வருவதாலும், டாப் ஸ்டார் நடிப்பதாலும் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.

இந்தப் படத்தின் ரிலீஸையொட்டி பிரசாந்த் பல யூடியூப் சேனல்களில் தனது கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சினிமா குறித்து தனது அனுபவங்கள் என்னென்ன என்பதை சுவாரசியமாக தெரிவித்துள்ளார். என்ன சொல்றாருன்னு பார்ப்போமா...

முதல்ல அந்தக் கதாபாத்திரத்துல நடிச்சா பொருத்தமா இருக்குமா? நம்மை ரசிகர்கள் பார்ப்பாங்களான்னு பார்ப்பேன். அடுத்து கதை, திரைக்கதையைப் பார்ப்பேன். இந்த மூணு விஷயங்களும் பிடிச்சிருந்தா தான் நடிப்பேன் என்கிறார் டாப் ஸ்டார் பிரசாந்த். டாப்ஸ்டார்ங்கற டைட்டிலே பிரசாந்துக்கு கொடுத்தது ரசிகர்கள் தானாம்.

சினிமாவுல மட்டுமல்ல. லைப்ல எந்த துறையாக இருந்தாலும் ஒழுக்கம் ரொம்ப முக்கியம். மனிதனா இருக்கும்போது அது ரொம்ப முக்கியம். என்ன சாதிக்கணும்னு ஆசைப்படறோமோ அதை பிளான் பண்ணி பண்ணினா ரொம்ப ஜாலியா இருக்கலாம். கஷ்டங்கள் இருந்தால் தான் முன்னேற முடியும்.

ஆனா இதெல்லாம் பிளான் பண்ணி பண்ணினா கொஞ்சம் பெட்டரா இருக்கும். கஷ்டம் வரும்போது ஈசியா ஹேண்டில் பண்ணலாம். அதே சமயம் ஒரு டார்கெட்டையும் ஈசியா ரீச் பண்ணலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அந்தகன் படத்தில் பிரசாந்துடன் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே.எஸ்.ரவிகுமார், வனிதா, மனோபாலா, பெசன்ட் ரவி என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இது ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாக வந்துள்ளது. இந்தியில் 2018ல் அந்தாதூண் என்ற பெயரில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News