மோகன் சொந்தக் குரலில் பேசி நடிக்காததுக்கு இதுதான் காரணமா? அட, அவரே சொல்லிட்டாரே..!
மோகன் மட்டும் ஏன் சொந்தக்குரலில் பேசி நடிக்கவே இல்லை என்றால் அவர் அப்படியும் நடித்திருக்கிறார். ஆனால் நடிக்காததுக்கு இதுதான் காரணம்...
தமிழ்த்திரை உலகில் 'மைக் மோகன்' என்றாலே நம் நினைவுக்கு வருபவர் நடிகர் மோகன் தான். இவரது படங்களில் பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட் அடிக்கும். பாடல்களுக்காகவே இவரது படங்கள் பெரும்பாலும் வெள்ளி விழா கண்டன. அதனாலே இவரை 'வெள்ளி விழா நாயகன்' என்றும் சொல்வர். இவருடைய படங்களில் இளையராஜாவின் கைவண்ணம் இருப்பதால் தான் அனைத்துப் பாடல்களும் ஹிட் அடித்தன.
மைக் மோகன் விஷயத்தில் எல்லோரையும் போட்டு ஆட்டிப்படைத்த கேள்வி இதுதான். மோகன் ஏன் சொந்தக் குரலில் பேசவில்லை என்பது. இதற்குப் பதில் சொல்கிறது இந்தப் பதிவு. மைக் மோகன் பலப்படங்களில் பேச மாட்டார். அவருக்கு எல்லாமே டப்பிங் தான்.
எஸ்.என்.சுரேந்தர் தான் அவருக்கு எப்போதும் டப்பிங் பேசுவார். எதனால் மோகன் சொந்தக் குரலில் பேசவே இல்லை. அவருக்கு தமிழ் வராதா என்று ஒரு நிகழ்ச்சியில் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மோகன் சொன்ன பதில் இதுதான்.
இதுக்கு முன்னாடி மக்கள் எனது சொந்தக் குரலைக் கேட்டுருக்காங்க. மீடியால தான் இதை சொல்லிக்கிட்டு இருக்காங்க. இதுக்கு முன்னாடி கலைஞர் அய்யா சொல்லி பாசப்பறவைகள் படத்தில் நான் தான் பேசினேன். படம் ஹிட்டாச்சு. ஆனா மூடுபனி படத்துல நண்பர் எஸ்.வி.சேகர் பேசியிருப்பாரு.
யதார்த்தமான தமிழ் வராது. கொஞ்சம் பெங்களூர் தமிழ் இருக்கும். அங்கெல்லாம் அப்படியான்னு சொல்ல மாட்டோம். 'ஆமாவா'ன்னு தான் கேட்போம். இதே மாதிரி சில சில விஷயங்கள் நான் வரும்போது கேட்டுச்சு. தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சொல்லுங்க. நானும் மெனக்கிடுறேன். இதான். என் சைடு எதுவும் தவறில்லை. நான் எப்படியாவது பண்ணுவன்னு எல்லாம் கேட்கல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மோகன் நடித்த பயணங்கள் முடிவதில்லை, இதயக்கோவில், நெஞ்சத்தைக் கிள்ளாதே, உதய கீதம், மூடுபனி, மெல்லத் திறந்தது கதவு ஆகிய படங்களின் பாடல்களைக் கேட்டால் அது உங்களுக்கு இனிய தருணமாகவே மாறி விடும். உங்கள் கவலைகள் எவ்வளவு இருந்தாலும் அதை மறக்கச் செய்து விடும்.
நீங்கள் வெறும் மோகன் ஹிட்ஸ்களைக் கேட்டாலே போதும். மனதுக்கு அவ்வளவு இதமாக இருக்கும். இரவுப்பொழுதில் கேட்டால் உங்கள் மனதை லேசாக்கிக் காற்றில் பறக்கச் செய்து விடும்.