நாலா பக்கமும் செக் வச்சாச்சு.. கைதி 2க்கு பிறகு லோகேஷ் இயக்கப்போகும் அந்த நடிகர்
மாஸ் காட்டும் லோகேஷ்: தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தன்னுடைய படங்களின் மூலம் தனித்திறமையை வெளிப்படுத்தி இன்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு இயக்குனராக மாறி இருக்கிறார். மாநகரம் படத்திலிருந்து தொடங்கி இப்போது ரஜினி நடிக்கும் கூலி திரைப்படம் வரை ஒவ்வொரு திரைப்படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற திரைப்படங்கள்.
லைஃப் டைம் செட்டில்மெண்ட்: இதில் கூலி திரைப்படம் இன்னும் படப்பிடிப்பில் தான் இருக்கின்றது. இந்த படத்தை எதிர்பார்த்து அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னதான் விஜய் கமல் சூர்யா கார்த்தி என பெரிய பெரிய ஹீரோக்களை வைத்து இயக்கினாலும் ரஜினியை இயக்கும் லோகேஷ் என்ற ஒரு பெயர்தான் அவரை இன்னும் உச்சத்தை அடைய வைக்கின்றது. கூலி திரைப்படம் மட்டும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று விட்டால் ரஜினிக்கும் சரி லோகேஷுக்கும் சரி இது ஒரு லைஃப் டைம் செட்டில்மெண்டாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
அடுத்து யார்?: கூலி திரைப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக அனைவரின் எதிர்பார்ப்பில் இருக்கும் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்க இருக்கிறார் லோகேஷ். அந்த படத்தில் கமலை ஒரு சிறிய காட்சியில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறதாம். கைதி 2 திரைப்படத்திற்கு பிறகு அடுத்து யாரை வைத்து படத்தை இயக்கப் போகிறார் என்ற ஒரு கேள்வியும் அனைவரும் மத்தியில் இருந்து வருகிறது. கூலி மற்றும் கைதி2 ஆகிய இரு படங்களை முடித்ததும் பிரபாஸை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்ற ஒரு தகவல் ஏற்கனவே சினிமாவில் உலா வந்து கொண்டிருக்கிறது.
ஜன நாயகன்: ஆனால் இப்போது பிரபாஸை வைத்து இயக்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதனால் இந்த இடைவெளியில் ஏற்கனவே லலித் எச் வினோத் இயக்கத்தில் தனுஷை வைத்து ஒரு படத்தை தயாரிப்பதாக இருந்தார்கள். இப்போது எச் வினோத் விஜய் வைத்து ஜனநாயகன் என்ற திரைப்படத்தை இயக்கி வருவதால் எச் வினோத்துக்கு பதிலாக லோகேஷை லலித் கமிட் செய்யலாம் என்றும் தெரிகிறது.
தனுசை பொருத்தவரைக்கும் எச் வினோத் இல்லை .லோகேஷ் என்றால் அவருடைய மற்ற படங்களை எல்லாம் விட்டுவிட்டு லோகேஷ் உடன் கைகோர்த்து விடுவார் .ஏனெனில் லோகேஷ் என்றாலே அது ஒரு தனி மார்க்கெட் என்பது தனுஷுக்கு தெரியும். இன்னொரு பக்கம் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக ஒரு தகவல் இருந்தது .அதனால் பேஷன் ஸ்டுடியோஸ் இப்போது லோகேஷ் கனகராஜை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது .
ஒருவேளை இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடியுமானால் சிவகார்த்திகேயனை வைத்து லோகேஷ் அவருடைய அடுத்த படத்தை இயக்குவதற்கும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. ஆக மொத்தம் ஒட்டுமொத்த கோடம்பாக்கமே லோகேஷுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.