பிரபல நடிகர்களின் பெயர்களில் நடித்த அஜித்.. என்னென்ன படங்கள் தெரியுமா?

By :  Rohini
Update:2025-02-26 13:22 IST

முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். தற்போது அவர் குட் பேட் அக்லி படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில்தான் இவருடைய நடிப்பில் விடாமுயற்சி படம் ரிலீஸானது. ஆனால் படம் ஓரளவு சுமாரான வரவேற்பைத்தான் பெற்றது. இரண்டு வருடங்கள் கழித்து அஜித்தின் படம் வெளியாகிறது என அஜித் ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்க ஆனால் படம் அந்த எதிர்பார்ப்பை முற்றிலும் சுக்கு நூறாக்கியது.

இந்த நிலையில்தான் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி குட் பேட் அக்லி படம் ரிலீஸாகிறது. ஒரே வருடத்தில் அஜித்தின் அடுத்தடுத்த இரு படங்கள் ரிலீஸ் எனும் போது ஏகே ரசிகர்களுக்கு ஒரே உற்சாகம்தான். குட் பேட் அக்லி படத்தில் திரிஷாவின் கேரக்டரை ரிவியல் செய்திருந்தார்கள். ரம்யா என்ற கதாபாத்திரத்தில் குட் பேட் அக்லி படத்தில் திரிஷா நடிக்கிறார். பட தேதி ரிலீஸ் நெருங்கும் வேளையில் இன்னும் படத்தை பற்றிய ஒவ்வொரு அப்டேட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குட் பேட் அக்லி படத்தின் டீஸர் வரும் 28 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அஜித் இது 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். அதில் பிரபல நடிகர்களாக இருக்கும் சில நடிகர்களின் பெயர்களில் அஜித் எந்தெந்த படங்களில் நடித்திருக்கிறார் என்பதை பற்றிய ஒரு சிறிய தகவலைத்தான் இதில் நாம் பார்க்க இருக்கிறோம்.

ரெட்டை ஜடை வயசு படத்தில் விஜய் என்ற கேரக்டரிலும் காதல் கோட்டை படத்தில் சூர்யா கேரக்டர், காதல் மன்னன் படத்தில் சிவா, அவள் வருவாளா படத்தில் ஜீவா, அமராவதி படத்தில் அர்ஜூன், பகைவன் படத்தில் பிரபு, நேர்கொண்ட பார்வை படத்தில் பரத் என்ற கேரக்டரிலும் நடித்திருக்கிறார் அஜித். ஏன் சமீபத்தில் வெளியான விடாமுயற்சி படத்தில் கூட அர்ஜூன் என்ற கேரக்டர் பெயரில்தான் நடித்திருந்தார்.

இப்படி இன்னும் எத்தனையோ படங்களில் பல பெயர்களில் நடித்திருந்தாலும் முக்கிய நடிகர்களின் பெயர்களில் நடித்தது மேலே சொன்ன படங்களில் மட்டும்தான். அஜித் தற்போது கார் ரேஸில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தி வருகிறார். ஸ்பெயினில் நடக்கும் கார் ரேஸில் தற்போது கலந்து கொண்டு மாஸ் காட்டி வருகிறார் அஜித்.

Tags:    

Similar News