ஒரே ஒரு வீடியோ!.. டிரெண்டிங்கில் வந்த அஜித்!.. ஆனாலும் இப்படி சொல்லிட்டாரே!....
Ajithkumar: அமராவதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் அஜித். சாக்லேட் பாயாக காதல் படங்களில் நடித்து, பின்னர் ஆக்ஷன் ரூட்டுக்கு மாறி, பில்லா மற்றும் மங்காத்தா போன்ற படங்களால் மாஸ் ஹீரோவாகவும் மாறினார். விஜயை போலவே இவருக்கும் பல ஆண் மற்றும் பெண் ரசிகைகள் இருக்கிறார்கள்.
விஜய்க்கு நடனம் என்றால் அஜித்துக்கு ஸ்டைலீஸ் லுக் என செட் ஆனது. எனவே, எல்லா படங்களிலும் ஸ்டைலான லுக்கில் வந்து ஸ்லோமோஷனில் நடப்பார் அஜித். கடந்த பல வருடங்களாகவே அஜித் எந்த மீடியாவையும் சந்திப்பது இல்லை. யாருக்கும் பேட்டி கொடுப்பதில்லை. பத்திரிக்கையாளர்களை பார்ப்பதும் இல்லை. எந்த சினிமா விழாவிலும் கலந்து கொள்வது இல்லை. அவர் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிக்கும் அவர் வருவது இல்லை.
மாறிய அஜித்குமார்: இதற்கு பின்னணியில் என்ன காரணம் என்பதும் தெரியவில்லை. 20 வருடங்களுக்கு முன் அஜித் இப்படி இல்லை. எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். சினிமா செய்தியாளர்களிடம் நட்பாக பேசுவார். ஒருகட்டத்தில் சினிமாவில் நடிப்பது, கார் ஓட்டுவது, பைக் ஓட்டுவது போன்ற விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தினார்.
இப்போது வரை அது தொடர்கிறது. விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டு துபாயில் நடக்கும் கார் ரேஸில் கலந்துகொள்ள போய்விட்டார். அவரின் டீமுக்கு அவர்தான் கேப்டன். இந்த போட்டிகள் இந்த வருடம் அக்டோபர் மாதம் வரை நடக்கவுள்ளது.
துபாயில் கார் ரேஸ்: இந்நிலையில், பல வருடங்களுக்கு பின் துபாயில் கார் ரேஸ் நடக்கும் இடத்தில் மீடியாவிடம் பேசியிருக்கிறார் அஜித். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி எக்ஸ் தளத்தில் டிரெண்டிங்கில் இருக்கிறது. 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் AjithKumarRacing என்கிற ஹேஷ்டேக்கில் அஜித் பேசும் வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.
அந்த வீடியோவில் பேசும் அஜித் ‘18 வயதில் கார் ரேஸில் பங்கேற்றேன். அதன்பின் சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்ததால் பங்கேற்க முடியவில்லை. அக்டோபர் மாதம் வரை ரேஸ் நடக்கிறது. எனவே, அதுவரை எந்த படத்திலும் நடிக்க மாட்டேன்’ என சொல்லியிருக்கிறார். பல வருடங்களுக்கு பின் அஜித் பேசும் வீடியோ வெளியே வந்தாலும் அக்டோபர் மாதம் வரை சினிமாவில் நடிக்க மாட்டேன் என சொல்லியிருப்பது அவரின் ரசிகர்களை அப்செட் ஆக்கியிருக்கிறது.
விடாமுயற்சி படம் மார்ச் மாதம் வெளியாக வாய்ப்பிருக்கிறது. அதேபோல், குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.