ஒழுக்கமா வாழல.. அந்த கோபத்தின் வெளிப்பாடுதான் இந்த படம்.. எமோஷனலா பேசிய பாலா
இயக்குனர் பாலா தன் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்களை சமீபகாலமாக பேட்டிகளில் கூறி வருகிறார். இதுவரை இப்படியான ஒரு பேட்டியை மீடியாக்களுக்கு கொடுத்ததே இல்லை. பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். சினிமாவிற்கு வந்து 25 வருடங்கள் ஆன நிலையில் 100க்கும் மேற்பட்ட படங்களை எடுத்ததை போல் பல்வேறு விஷயங்களை பகிருந்திருக்கிறார். ஆனால் 15க்கும் குறைவான படங்களைத்தான் பாலா இயக்கியிருக்கிறார்.
அந்தப் படங்களில் பெரும்பாலும் வன்முறைகள்தான் அதிகமாக இருக்கும். சேது படத்தில் முதல் பாதி நம் வாழ்க்கையில் ஒன்றிப்போன கேரக்டராகத்தான் அந்தப் படத்தில் காட்டியிருப்பார். ஆனால் இரண்டாம் பாதி முற்றிலும் வேறுபட்டிருக்கும். பிதாமகன் படத்தில் விக்ரமின் கதாபாத்திரத்துடன் நாம் நிஜவாழ்க்கையில் பழகியிருக்கமாட்டோம். ஆனால் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பாலா காட்டியிருப்பார்.
இப்படி நாம் பழகாத ஒரு கேரக்டர் நிஜவாழ்க்கையில் எப்படியெல்லாம் இருக்கும்? எந்த மாதிரி அவமானங்களை துயரங்களை அனுபவிக்கிறது என்பதை கொடுப்பதே பாலாவின் படங்கள் தான். அந்த வகையில் வன்முறைக் காட்சிகள் அதுவும் பார்க்க முடியாத அளவு வன்முறை காட்சிகள் இருக்கிறதே என்று பாலாவிடம் கேட்டதற்கு அதற்கு பாலா எதிர்பார்க்காத பதிலை கொடுத்திருக்கிறார்.
நான் ஆரம்பத்தில் ஒழுக்கமாகவே வாழவில்லை. எல்லாவற்றிலும் ஒரு எக்ஸ்ட்ரீமுக்கு போயிட்டு வந்தவன். அது சரியோ தவறோ எல்லாவற்றிலும் போய் வந்தவன். அந்த ஒரு கோபம் கூட இருக்கலாம். யார் மீதும் கோபப்படுறதுக்கு ஒன்றுமில்லை. என் மேல் எனக்கே கோபம். அதனால்தான் படத்தில் வன்முறை காட்சிகளில் ஒருவனை சரமாரியாக அடிக்கும் போது என்னை நானே அடித்துக் கொள்வது போல இருக்கும்.
ஆனால் இப்பொழுது அந்த தவறை நினைத்து வருத்தப்படுகிறீர்களா? என்ற கேள்விக்கு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இப்போ வருத்தப்பட்டு என்ன செய்வது. காலம் போய்விட்டதே என்று கூறினார். பாலாவை பொறுத்தவரைக்கும் சிறுவயதில் ஏகப்பட்ட கஷ்டங்களை பார்த்து வந்தவர். செய்யக் கூடாத தவறுகளை செய்திருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் எல்லாத்தையும் தலை முழுகி இப்போதுதான் ஒரு மனுஷனாக நிற்கிறார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.