எவ்வளவு நாள்தான் அடுத்தவனுக்கே கைத்தட்ட? ‘கூலி’ படத்தில் அமீர்கான் வந்தது இதுக்குத்தானா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கூலி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. அதற்காக சமீபத்தில் கூட ரஜினி ஜெய்ப்பூருக்கு பயணம் செய்தார். விமான நிலையத்தில் ரஜினியை சூழ்ந்து கொண்டு ரசிகர்கள் போட்டோவும் எடுத்துக் கொண்டனர். ஜெயிலர் ,வேட்டையன் என தொடர்ந்து பாக்ஸ் ஆஃபிஸில் கலெக்ஷனை கொடுக்கும் ரஜினி கூலி படத்தின் மூலமும் அதிக வசூலை கொடுப்பாரா என காத்திருக்க வேண்டும்.
தமிழ் இல்லாமல் கன்னடம், தெலுங்கு என பிறமொழி திரைப்படங்கள் வெளியாகி 1000 கோடி வசூலை சர்வசாதாரணமாக தொட்டு விடுகிறது. அதற்கு ஒரு காரணமாகவும் தமிழ் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் அந்த படங்களை கொண்டாடுவதை நம்மூர் மக்கள்தான் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் சமீபத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படம்.
இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் தனஞ்செயன் இதை பற்றி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அடுத்த படங்களுக்கே கைத்தட்டி கொண்டிருக்கிறோம். எப்பொழுது நம் படத்துக்கு கைத்தட்டுவது. புஷ்பா 2 படம் இந்தளவு கலெக்ஷன் ஆனதற்கு ஆந்திரா மக்கள் இல்லை. ஓவர் சீஸ் மற்றும் ஹிந்தி ரசிகர்களால்தான். ஓவர் சீஸில் 300 கோடி மற்றும் ஹிந்தியில் மட்டுமே 300 கோடி வசூலித்திருக்கிறது.
இப்படி ஹிந்தியிலும் படம் தட்டி தூக்க வேண்டும். இதற்காகத்தான் கூலி படத்தில் அமீர்கானை கொண்டு வந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன். தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி படமாக கூலி படம் அமைய நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஏற்கனவே படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருக்க ஹிந்தியிலும் காலூன்ற வேண்டுமென்றால் அங்கு ஒரு சூப்பர் ஹீரோவை தூக்க வேண்டும். அதற்காகத்தான் அமீர்கான் இந்தப் படத்திற்கு வந்திருக்கிறார்.
இன்னும் பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் அவரும் ஜெய்ப்பூர் போயிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கூடிய சீக்கிரம் பட நிறுவனம் அமீர் கான் இருப்பதை உறுதி செய்து விடும். படமும் 1000 கோடியை வசூலிக்கும் என தனஞ்செயன் கூறினார்.