மதகஜராஜா கொடுத்த நம்பிக்கை.. ஜொலிக்க வரும் துருவ நட்சத்திரம்.. எப்போனுதான கேட்குறீங்க
ஒரு படத்தின் கதை நல்லா இருந்துச்சுன்னா அந்த படத்தை எப்போது ரிலீஸ் செய்தாலும் மக்கள் கண்டிப்பாக கொண்டாடுவார்கள் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் மதகஜராஜா திரைப்படம். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு முன்பே படம் முடிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கி 2013 ஆம் ஆண்டில் ரிலீஸ் ஆக வேண்டிய திரைப்படம் .இந்த ஆண்டு பொங்கல் அன்றுதான் ரிலீஸ் ஆனது.
12 வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கதை. மக்கள் எப்படி இதை வரவேற்பார்கள் .அவர்களுக்கு பிடிக்குமா? பிடிக்காதா என்ற ஒரு பயத்துடனே தான் இந்த படத்தை ரிலீஸ் செய்திருப்பார்கள் .ஆனால் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தது மதகஜ ராஜா. அதிலும் குறிப்பாக இந்த படத்தில் காமெடியனாக நடித்த சந்தானம் இப்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து தனக்கான ஒரு தனி அந்தஸ்தை பெற்றுவிட்டார்.
அதனால் காமெடியனாக நடித்த படம் .சந்தானத்தின் காமெடியை எப்படி மக்கள் ரசிப்பார்கள் என்றெல்லாம் பயம் இருக்கத்தான் செய்யும். இருந்தாலும் இப்போது வரும் படங்களில் காமெடி என்பது அந்த அளவுக்கு ரசிக்கும்படியாக இல்லை. இந்த படத்தை பார்த்தவுடன் அனைவருமே தயவுசெய்து காமெடிக்கு திரும்பி வாருங்கள் என சந்தானத்தை கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள் .அந்த அளவுக்கு படத்தின் காமெடிதான் வெற்றிக்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்தது.
இதே மாதிரி இன்னும் எத்தனையோ படங்கள் ரிலீஸ் ஆகாமல் கிடக்கின்றன இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு அந்த படங்களை எல்லாம் ஒவ்வொன்றாக ரிலீஸ் செய்யும் முயற்சியில் படக்குழு இறங்கி இருக்கிறார்கள். இதில் அனைவரின் நீண்ட வருட எதிர்பார்ப்பாக இருந்த திரைப்படம் துருவ நட்சத்திரம் .கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ் அருண் விஜய் ஆகியோர் நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் தான் துருவ நட்சத்திரம்.
இந்த படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்த விட வேண்டும் என்ற முயற்சியில் ஒவ்வொரு வருடமும் கௌதம் மேனன் நிறைய முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. மதகஜராஜா ராஜா வெற்றிக்கு பிறகு அந்த ஒரு நேரம் துருவ நட்சத்திரத்திற்கு வந்துவிட்டது. இந்த படத்தை திருப்பூர் சுப்ரமணியன் சமீபத்தில் பார்த்தாராம் .
பார்த்துவிட்டு அவருக்கு மிகவும் படம் பிடித்து போய் இருக்கிறதாம். அதனால் படத்தை கண்டிப்பாக ரிலீஸ் செய்து விடலாம் என கூறி மே ஒன்றாம் தேதி படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்களாம். ஏற்கனவே மே ஒன்றாம் தேதி சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சூர்யாவோடு விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படம் மோதுமா என்ற ஒரு கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.