அஜித் சொல்ல நினைச்சது இதுதான்!.. நாங்க செம ஹேப்பி!.. மகிழ்திருமேனி பேட்டி!...
Vidaamuyarchi: மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித் நடித்து உருவான விடாமுயற்சி திரைப்படம் ஒருவழியாக கடந்த 6ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. வழக்கமான அஜித் படத்தை எதிர்பார்த்து போனவர்களுக்கு இப்படம் கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்தது. எனவே, நெகட்டிவ் கருத்துக்கள் சொல்லப்பட்டது.
பொதுவான ரசிகர்கள் படம் நன்றாக இருப்பதாகவே சொன்னார்கள். ஒருபக்கம், படத்திற்கு பெரிய வசூல் இல்லை. இப்படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்துக்கு 150 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என்றும் சொன்னார்கள். ஆனால், இதை ஏற்காத அஜித் ரசிகர்கள் ‘இது பொய்யான செய்தி.. படம் ஹிட்’ என்றெல்லாம் சமூகவலைத்தளங்களில் சொல்லி வருகிறார்கள்.
படம் வெளியாகி 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் இந்தியாவில் 65.25 கோடி வரை மட்டுமே வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அஜித்தின் சம்பளத்தை விடவும் இது மிகவும் குறைவு. எனவே, படம் நஷ்டம்தான் எனவும் பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில், படம் வெளியாவதற்கு முன்பே பல ஊடகங்களில் பேசி இப்படம் பற்றி புரமோஷன் செய்த மகிழ் திருமேனி இப்போது படம் ரிலீஸான பின்னரும் பேசி வருகிறார்.
சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய அவர் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். வன்மத்தோடு நெகட்டிவி ரிவ்யூ சொல்றாங்க. அஜித் சார் ஹேப்பி.. லைக்கா ஹேப்பி, அஜித் ரசிகர்கள் குறிப்பாக அஜித்தின் பெண் ரசிகைகள் ஹேப்பி. நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அஜித்தின் உண்மையான ரசிகர்கள் படம் பார்த்து சந்தோஷப்படுகிறார்கள். இதற்கு மேல் என்ன வேண்டும்?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பெண் உரிமையையும், அவர்களுக்கான சுதந்திரம் பற்றியும் பேச நினைத்தார் அஜித். ஒரு திருமண பந்தத்தில் இருந்து விலகிக்கொள்ளும் உரிமையும், அதிகாரமும் ஒரு பெண்ணுக்கு இருக்கிறது. அவளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்தாலும் அவளுக்கான மரியாதையை நாம் கொடுக்க வேண்டும் என்பதுதான் இந்த படத்தில் நாங்க சொல்ல வந்த கருத்து.
முதல் நாள் முதல் காட்சி ரசிகர்களுடன் நானும் படம் பார்த்தேன். என்னை திட்டுவார்களோ என்கிற பயமும் எனக்கு இருந்தது. ஆனால், அந்த மாதிரி எதுவும் நடக்கல. படத்தின் 2ம் பாதியில் அஜித் சார் ஆக்சனில் இறங்கிய பின் தியேட்டரே கொண்டாட துவங்கிவிட்டது. நாமதான் சரியாதான் எடுத்திருக்கோம் என்கிற நம்பிக்கையும் எனக்கு வந்தது’ என்றும் சொல்லியிருக்கிறார்.