தமிழ்நாட்டுக்கே இனி இவங்க தான்.. நயன்தாராவுக்கு செம்பு தூக்கியாக மாறிய நடிகர்

By :  Rohini
Update:2025-03-12 15:54 IST

தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இப்போது அவர் நடிகையாக மட்டும் இல்லாமல் பிசினஸ் வுமனாகவும் வளர்ந்து நிற்கிறார். ஏகப்பட்ட பிசினஸ்களை செய்து வருகிறார். ஒரு பக்கம் சினிமா, ஒரு பக்கம் குடும்பம், இன்னொரு பக்கம் பிசினஸ் என ஒரு பிசியான பெண்மணியாக நயன்தாரா திகழ்ந்து வருகிறார்.

தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. சமீபத்தில் தான் அந்த படத்தின் பூஜை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. பூஜையை மிக பிரமாண்டமாக நடத்தினார் படத்தின் தயாரிப்பாளர். இந்த படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. இதன் மூலம் சுந்தர் சி கெரியரிலும் நயன்தாராவின் கெரியரிலும் அதிக பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாக இது இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

சமீபத்தில்தான் நயன்தாரா அவருடைய லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை வேண்டாம் என ஒரு அறிக்கை மூலமாக தெரிவித்திருந்தார். ஏற்கனவே அஜித் ,கமல் என அவர்களுக்கு உண்டான பட்டத்தை வேண்டாம் என அறிக்கை வெளியிட்டனர். அவர்கள் வரிசையில் இப்போது நயன்தாராவும் அறிக்கையில் இனிமேல் யாரும் என்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என கூறி இருந்தார்.


நயன்தாரா என்று அழைத்தால் போதும் என தெரிவித்திருந்தார் .ஏன் நயன்தாரா திடீரென இந்த முடிவை எடுத்தார் என பலரும் கேள்விகளை எழுப்பி வந்தனர். எது எப்படியோ நயன்தாரா இப்போதுதான் பக்குவப்பட்டு இருக்கிறார் என சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நடிகர் கூல் சுரேஷ் நயன்தாராவை பற்றி சில விஷயங்களை பகிர்ந்தார்.

அதாவது நயன்தாரா என்றால் லேடி சூப்பர் ஸ்டார், லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது நயன்தாராதான். அதை யாராலும் மாற்ற முடியாது. ரப்பர் கொண்டு கூட அதை அழிக்க முடியாது. அவர்தான் லேடி சூப்பர் ஸ்டார். இந்த தமிழ்நாட்டுக்கே அவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் என ஆக்ரோஷமாக ஒரு மேடையில் பேசினார் கூல் சுரேஷ்.

Tags:    

Similar News