தில் ராஜுவுக்கு கை கொடுக்கும் அல்லு அர்ஜூன்!.. ஆனா அட்லிக்கிட்ட கோர்த்து விடுறாரே!...
ஹைதராபாத்: தெலுங்கில் முக்கிய தயாரிப்பாளராக இருப்பவர் தில் ராஜூ. சின்ன பட்ஜெட், பெரிய பட்ஜெட் என அனைத்து வகையான படங்களையும் தயாரிப்பார். விஜயை வைத்து வாரிசு படத்தை தயாரித்தவர். ஷங்கரின் இயக்கத்தில் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்கிற படத்தை துவங்கினார். ஒரு பக்கம் இந்தியன், ஒரு பக்கம் கேம் சேஞ்சர் என 2 படங்களையும் மாறி மாறி இயக்கி வந்தார் ஷங்கர்.
கேம் சேஞ்சர்: கேம் சேஞ்சர் படத்தில் இடம் பெற்ற 5 பாடல்களுக்கு மட்டும் 75 கோடி வரை செலவு செய்தார் ஷங்கர். அதிலும், படத்தில் இடம் பெறாத ஒரு பாடலுக்கு 15 கோடி வரை செலவு செய்து தயாரிப்பாளரை அதிர வைத்தார். ஆனால், பேன் இண்டியா படம் என்பதால் வசூலை எப்படியும் அள்ளிவிடும் என்கிற நம்பிக்கையில் தில் ராஜூ இருந்தார்.
தில் ராஜுவுக்கு ஏற்பட்ட நஷ்டம்: 450 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தில் தில் ராஜுவுக்கு 150 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டது. ஏனெனில் இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே தோல்வியை சந்தித்தது. இந்த படத்தால் ஹைதராபாத்தில் இருந்த ஒரு பெரிய இடத்தையே தில் ராஜூ விற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதாவது வாரிசு படத்தில் சரத்குமாரின் வீடு போல ஒரு செட் போடப்பட்டிருக்கும் இடம்தான் தில் ராஜு கையை விட்டு போய்விட்டது.
புஷ்பா நடிகர் உதவி: கேம் சேஞ்சர் தோல்வி என்பதால் உங்களுக்கு மீண்டும் ஒரு படம் நடித்து கொடுக்கிறேன் என ராம் சரண் அவருக்கு வாக்குறுதி கொடுத்ததாக செய்திகள் வெளியானது. ஆனால், அவருக்கு முன்பே புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜூன் தில் ராஜுவுக்கு உதவ முன் வந்திருக்கிறார். ஜவான் படத்திற்கு பின் அட்லி இயக்கவுள்ள புதிய படத்தை அட்லி இயக்கவுள்ளார்.
விலகிய சன் பிக்சர்ஸ்: அட்லி சொன்ன பட்ஜெட் அதிகம் என்பதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்திலிருந்து விலக தில் ராஜூவை அழைத்திருக்கிறார் அல்லு அர்ஜூன். ஆனால், அட்லிக்கு 100 கோடி சம்பளம், அல்லு அர்ஜூனுக்கு 250 கோடி சம்பளம், இது போக படத்தின் பட்ஜெட் என பார்த்தால் எப்படியும் இப்படம் 600 கோடி பட்ஜெட்டை தாண்டிவிடும்.
விரைவில் அறிவிப்பு: ஆனால், ஷங்கரின் சிஷ்யர்தான் அட்லி. குருவை போலவே சிஷ்யனும் தயாரிப்பாளரின் நஷ்டத்தை பற்றி கவலைப்படமாட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே, இந்த படம் டேக் ஆப் ஆகுமா?.. தில் ராஜு தயாரிப்பாரா?.. அட்லிதான் இயக்குவாரா? என்பதெல்லாம் வருகிற ஏப்ரல் 8ம் தேதி தெரியவரும். ஏனெனில், அன்று அல்லு அர்ஜூனுக்கு பிறந்தநாள் ஆகும். அதற்குள் பேசி முடிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டால் அன்று அறிவிப்பு வெளியாகும். ஒருவேளை அறிவிப்பு வெளியாகவில்லை எனில் அட்லி அப்படத்தை இயக்கவில்லை என புரிந்துகொள்ள வேண்டும்.