வடசென்னை2ல் தனுஷ் இல்லையா? இந்த டிரெண்டிங் ஸ்டார் கைக்கு மாறிவிட்டதாம்!

By :  Akhilan
Update:2025-03-12 18:00 IST

VadaChennai2: பெரிய அளவில் எதிர்பார்ப்பில் இருந்த தனுஷின் நடிப்பில் வெளிவந்த வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பொதுவாக ஒரு இயக்குனர் மற்றும் ஹீரோ இணைந்தாலே அப்படத்துக்கு ஆதரவு அதிகரித்து விடும். அப்படி ஒரு கூட்டணிதான் தனுஷ் மற்றும் வெற்றிமாறன். அவர்கள் இணைந்து இதுவரை வெளியான ஆடுகளம், பொல்லாதவன், வடசென்னை என எல்லா படங்களுமே மிகப்பெரிய வெற்றியை குவித்தது.

இதில் வடசென்னை இரண்டாம் பாகம் வரும் என ரசிகர்கள் பல ஆண்டுகளாகவே காத்திருக்கின்றனர். தனுஷும் தன்னுடைய மற்ற படங்கள் மற்றும் இயக்கத்தில் பிஸியாகவே இருந்து வருகிறார். வெற்றிமாறனும் தன்னுடைய விடுதலை 2 படத்தினை சமீபத்தில் முடித்து வெளியேறினார். இதனால் இந்த வருடத்துக்குள் வடசென்னை2 அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஒவ்வொரு முறை வெற்றிமாறன் மற்றும் தனுஷிடம் இதுகுறித்து கேட்ட போது சீக்கிரம் நல்ல சேதி வரும் என்றே பேசி இருந்தனர். ஆனால் தற்போது வடசென்னை ரசிகர்களுக்கு ஒரு ஷாக் காத்திருக்கிறது. வடசென்னை 2 துவங்க இருக்கிறது.

ஆனால் படத்தினை வெற்றிமாறன் இயக்க போவது இல்லையாம். அதுபோல இப்படத்தில் நடிகர் தனுஷும் நடிக்க போவது இல்லையாம். வெற்றிமாறனின் உதவி இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் தான் இப்படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மேலும் இப்படத்தின் ஹீரோவாக மணிகண்டன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறாராம். தற்போது தொடர்ச்சியாக சூப்பர்ஹிட் படங்களை மணிகண்டன் கொடுத்து வருகிறார். அவர் நடிப்பில் குட் நைட், லவர், குடும்பஸ்தன் என எல்லா படங்களுமே சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்றது. 

 

இதனால் தற்போது கோலிவுட்டில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் வடசென்னை 2வில் அவர் ஹீரோவாக நடித்தால் சினிமா கேரியர் மிகப்பெரிய உச்சத்தை அடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வடசென்னை2வை உதவி இயக்குனர் கையில் கொடுக்கும் வெற்றிமாறன் வாடிவாசல் படத்தில் முழு வீச்சாக இறங்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News