கோபம் கொப்பளித்த விஜயகாந்த்... மிமிக்ரி ஆர்டிஸ்ட்டின் அந்தோ பரிதாபங்கள்!

By :  Sankaran
Update:2025-03-12 17:20 IST

பல குரல்களில் பேசுவது என்பது ஒரு தனி கலை. ஆங்கிலத்தில் இதையே மிமிக்ரி என்று சொல்வார்கள். இந்தக் கலை அவ்வளவு சீக்கிரத்தில் எல்லோருக்கும் வந்துவிடாது. அதற்கு என்று பல கட்டமாக முயற்சி எடுக்கணும். எந்த மாதிரி பேசணுமோ அதை முதலில் மைன்ட்ல ஏற்றிக் கொண்டு பிறகு அதைப் போல பேசிப்பழக வேண்டும். இது மிமிக்ரி பேசுபவர்கள் சுலபமாகப் பிடித்துக் கொள்வார்கள். ஒருவர் பேசுவதைப் பார்த்த உடனே அவரைப் போல பேசிவிடுவார்கள்.

மேடைகளில் மிமிக்ரி சேது: அந்த வகையில் ஒரு கலைஞர்தான் மிமிக்ரி சேது. இவர் படங்களில் பின்னணி குரல் கொடுப்பவர். பல நடிகர்களின் குரல்களை மேடைகளில் மிமிக்ரி செய்து பேசுவதில் வல்லவர். இவர் தனது அனுபவங்களைப் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்துள்ளார். அப்போது விஜயகாந்த் குறித்து சில தகவல்களைச் சொன்னார். வாங்க பார்க்கலாம்.

கேப்டன் சாருக்கும் விருதாச்சலத்துல தேர்தல்ல நிக்கும்போது தேர்தல் அறிக்கையை அவரு குரல்ல நான்தான் பேசுனேன். விஜயகாந்த் சார் நல்ல டைப். ஆனா வேற ஏதாவது ஒரு மூடுல வரும்போது நாம பேசுனா கோபப்படுவாரு.

விஜயகாந்த் வாய்ஸ்: ஒரு கல்யாணத்துல கச்சேரி நடக்குது. அப்போ விஜயகாந்த் வாய்ஸ்ல நான் பேசுனேன். 'ஏய் உன்னை உள்ளேத் தூக்கிப் போட்டு அடிச்சா உத்தரப்பிரதேசத்துல இருந்து இல்ல. உடுமலைப்பேட்டையில இருந்துகூட ஒரு பய வரமாட்டான்'னு அவரோட டயலாக்கைப் பேசுனேன். அந்த டயலாக் எனக்கு ரொம்ப பிடிக்கும்.


விஜயகாந்த் என்ட்ரி: அவரோட டயலாக்கை எல்லாமே மனப்பாடமா வச்சிக்குவேன். கேப்டன் பிரபாகரன்ல இருந்து எல்லாமே பேசுவேன். அப்ப நான் ஒரு கச்சேரில பேசுனேன். என்ட்ரியா ஆனாரு. இந்த டயலாக்கை நான் பேசுன உடனே பட்டுன்னு திரும்பினாரு. படக்குன்னு நான் மைக்கை விட்டுட்டேன். பயமா ஆகிருச்சு.

பேவரைட் வாய்ஸ்: ரொம்ப பிடிச்ச ஆளுங்கன்னா அவங்களோட படங்களைப் பார்த்துக்கிட்டே இருப்பேன். அதுல நிறைய விஷயங்கள் கிடைக்கும். மணிவண்ணன், ஜனகராஜ், சத்யராஜ், பூரணம் விஸ்வநாதன் சார் வசனம் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். விஎஸ்.ராகவன் வாய்ஸ்தான் எனக்கு பேவரைட். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News