30 செருப்புகளின் நடுவே கிடந்த பாலா.. 25 வருட ரகசியம்.. பகிர்ந்த மிஷ்கின்
வணங்கான்: தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர் இயக்குனர் பாலா. தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கின்றது. படத்தில் அருண்விஜய் ஹீரோவாக நடிக்கிறார். படம் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் வெளியாக இருக்கின்றது. முதல் போஸ்டரிலேயே அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தவர் பாலா. ஒரு கையில் பிள்ளையார் இன்னொரு கையில் பெரியார் இருப்பது போல வித்தியாசமான போஸ்டருடன் வெளியிட்டார் பாலா.
இப்படி ஒரு புரோமோஷன்: அதிலிருந்தே இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு கிளம்பியது. வணங்கான் திரைப்படம் மட்டும் இல்ல. அவர் எடுத்த எல்லா படங்களிலுமே ஒரு ஆழமான கருத்தை சொல்லியிருப்பார் பாலா. ஏதாவது ஒரு வகையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவையாகவே அவருடைய படங்கள் அமைந்திருக்கின்றன. வணங்கான் திரைப்படத்தை மக்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற முயற்சியில் பாலா மிகவும் கவனமாக இருக்கிறார்.
பாலாவின் மெனக்கிடல்:இதுவரை எந்தவொரு சேனலுக்கும் பெரிய அளவில் அவர் பேட்டி கொடுத்ததே இல்லை. ஆனால் இந்தப் படத்திற்காக பாலா பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். இன்னொரு பக்கம் அருண்விஜயும் படத்தை பற்றியும் இயக்குனர் பாலாவுடனான அவருடைய அனுபவத்தை பற்றியும் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் பாலாவை பற்றி இயக்குனர் மிஷ்கின் சொன்ன ஒரு விஷயம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சுமார் 25 வருடத்திற்கு முன்பு நடந்த சம்பவம் இது. இயக்குனர் ராஜீவ் மேனன் ஒரு ஸ்டூடியோவிற்கு ஒரு பட வேலையாக சென்றிருந்தாராம். அப்போது அங்கு வெளியே 30 செருப்புகளின் நடுவே ஒரு ஒல்லியான உருவம் கொண்ட நபர் அயர்ந்து படுத்துக் கிடந்தாராம். இதை பார்த்ததும் ராஜீவ் மேனன் இது யார் என கேட்டிருக்கிறார். அங்கிருந்த ஒருவர் ‘இவர் ஒரு படத்தின் இயக்குனர்’ என சொல்லியிருக்கிறார்.
ராஜீவ் மேனனுக்கு ஒரே அதிர்ச்சி. அவர்தான் சேது என்ற ஒரு அற்புதமான படைப்பை படைத்த பாலா என மிஷ்கின் கூறினார். நீண்ட வருட போராட்டத்திற்கு பிறகு ஒரு படத்தை முடித்த களைப்பில் அந்த மனுஷன் தூங்கிக் கொண்டிருந்தார் என மிஷ்கின் பாலாவை பற்றி கூறினார்.