இந்த மாதிரி கேள்வியை கேட்காதீங்கன்னு சொல்லிருக்கேன்.. நிருபர்களை கடிந்த ரஜினி

இப்படி ஒரு கேள்வியை கேட்கலாமா? நிருபர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த ரஜினி

By :  rohini
Update: 2024-09-20 05:57 GMT

தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் ஸ்டாராக கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேலாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் ரஜினிகாந்த். அடுத்த வருடம் அவருடைய பொன்விழா ஆண்டை நெருங்குகிறார் ரஜினி. கிட்டத்தட்ட சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகளை தொட இருக்கிறார்.

இந்த 50 ஆண்டு காலத்தில் அவர் எத்தனையோ போராட்டங்களை சந்தித்து இருக்கிறார். சாதனைகளை அடைந்திருக்கிறார். எண்ணற்ற பெயரும் புகழும் பெற்ற ஒரு கலைஞராக இன்று தமிழ் சினிமாவில் கோலோச்சி இருக்கிறார் ரஜினி. 70 வயதை கடந்தாலும் இன்னும் அதே வைராக்கியத்துடனும் உத்வேகத்துடனும் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் .

எப்போதுமே ஒரு சுறுசுறுப்புடன் மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருந்து வருகிறார் ரஜினிகாந்த். தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதரபாத் சென்றிருந்த நிலையில் இன்று சென்னை திரும்பி இருக்கிறார் ரஜினிகாந்த்.

அப்போது ரஜினியை பார்த்து பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொள்ள அவரிடம் வேட்டையன் திரைப்படத்தைப் பற்றி பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் ஒரு நிருபர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாரே உங்களுடைய கருத்து என்ன என்ற கேள்வியை கேட்டார்.

உடனே அந்த நிருபரிடம் கோபமாக ரஜினி அரசியல் கேள்விகளை கேட்காதீர்கள் என்று ஏற்கனவே நான் சொல்லி இருக்கிறேன் அல்லவா? இனிமேல் கேட்காதீங்க என சொல்லிவிட்டு விறு விறுவென சென்று விட்டார் ரஜினிகாந்த். இந்த ஒரு வீடியோ தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற உள்ள நிலையில் கூலி படப்பிடிப்பிலிருந்து இன்று சென்னை வந்திருக்கிறார் ரஜினிகாந்த். வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி உலகெங்கிலும் ரிலீசாக இருக்கின்றது. படத்தைக் காண அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Tags:    

Similar News