தமிழ் சினிமா இனிமே சிவகார்த்திகேயன் கைலதான்.. அதற்கான முதல் ஸ்டெப்தான் இது
தற்போது தமிழ் சினிமாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். எத்தனையோ படங்களில் அவர் நடித்திருந்தாலும் எத்தனையோ சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் அமரன் திரைப்படம் தான் அவரை தமிழக மக்களின் மனதில் இன்னும் ஒரு பெரிய அந்தஸ்தை கொடுக்க காரணமாக அமைந்தது.
அந்த படம் ஏற்படுத்திய தாக்கம் சிவகார்த்திகேயன் மீது ஒட்டுமொத்த ரசிகர்களும் அன்பை வாரி இறைத்தனர். ஆரம்பத்தில் சின்னத்திரையில் ஒரு காமெடி நடிகராக நடித்து வந்தவர், பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர், நகைச்சுவை படங்களிலேயே தன் கவனத்தை செலுத்தி வந்தவர், இப்படி பார்த்த சிவகார்த்திகேயன் என்று ஊரே வியக்கும் அளவுக்கு ஒரு மாபெரும் ஆக்சன் ஹீரோவாக அமரன் திரைப்படத்தில் தோன்றியது ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியது.
தோற்றத்திலிருந்து சினிமாவிற்காக தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். மற்ற நடிகர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது சிவகார்த்திகேயன் வளர்ச்சி அனைவருக்கும் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இது ஒரு நல்ல ட்ரான்ஸ்பர்மேஷன் என்றே சொல்லலாம். தற்போது விஜய் அஜித்துக்கு நிகரான ஒரு நடிகராக சிவகார்த்திகேயன் பார்க்கப்படுகிறார். இன்று அவருடைய சம்பளம் பற்றி தான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். சுதா கொங்கராவுடன் ஒரு புதிய படத்தில் இணைந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இந்த படத்தின் மூலம் முதன் முதலில் சம்பளம் வேண்டாம். அதற்கு பதிலாக படத்தின் லாபத்தில் இருந்து தன்னுடைய ஷேரை வாங்கிக் கொள்கிறேன் என்ற வகையில் பேசி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இது ஒரு நல்ல டெக்னிக் என்று கோடம்பாக்கத்தில் கூறி வருகிறார்கள்.
ஏனெனில் ஆந்திராவில் சினிமா ஒரு மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி செல்கிறது என்றால் அதற்கு காரணம் அங்குள்ள நடிகர்கள் சிவகார்த்திகேயன் மாதிரி சம்பளம் வாங்காமல் படத்தில் இருந்து வரும் ஷேரை சம்பளமாக பெற்றுக் கொள்வது தான் காரணம் .
அதாவது அட்வான்ஸ் தொகையாக ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் வாங்கிக் கொண்டு படத்தின் இலாபத்திலிருந்து வரும் தொகையை நடிகர்கள் அங்கு பங்கிட்டு கொள்கிறார்கள். ஆனால் இங்கு உள்ள நடிகர்கள் படத்தின் பட்ஜெட்டில் முக்கால்வாசி பணத்தை சம்பளமாக வாங்கிக் கொள்கிறார்கள்.
மீதம் இருக்கும் பணத்தில் தான் படத்தையே எடுக்கிறார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் இந்த படத்திற்கு பிறகு ஆந்திரா நடிகர்களை மாதிரி பின்பற்றுவதால் இது தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல தொடக்கம் என்று சொல்லப்படுகிறது.