என்னடா பொழப்பு இது!.. கவுத்துப்போட்ட கேங்கர்ஸ்!.. அடுத்த பொழப்பை பார்க்க ஆரம்பித்த வடிவேலு!..

கார்த்திகேயன் மணி இயக்கத்தில் காளி வெங்கட், பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி, சத்யராஜ் மற்றும் பிக் பாஸ் முத்துகுமரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள மெட்ராஸ் மேட்னி படம் உருவாகி வருகிறது. அந்த படத்தில் இடம்பெற்றுள்ள “என்னடா பொழப்பு இது” பாடலை வடிவேலு பாடிய நிலையில், அதன் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் லைகா உதவியால் ஷங்கர் பிரச்னையை சமாளித்து மீண்டும் சினிமாவில் நுழைந்த வடிவேலுவுக்கு அந்த படம் ஓடவில்லை. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடித்த மாமன்னன் திரைப்படம் மட்டுமே வடிவேலுவுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது.

சந்திரமுகி 2 படத்தைத் தொடர்ந்து சுந்தர். சி இயக்கி நடித்த கேங்கர்ஸ் திரைப்படம் ஓவர் பில்டப் செய்யப்பட்டு வெளியானது. பல வித கெட்டப்புகளில் பிடி மாஸ்டர் சிங்காரம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சந்தானம் படத்திலேயே சிரிப்பு வரவில்லை என்கிற நிலை உருவான பின்னர், வடிவேலு எல்லாம் எப்படி ரசிகர்களை சிரிக்க வைப்பார் என்கிற நிலை உருவாகி விட்டது.
அதே பழைய காமெடியை போட்டு ஓட்டலாம் என நினைத்த அவருக்கு சரியான அடி கொடுத்து ரசிகர்கள் அந்த படத்தை ஓடவிடாமல் செய்துவிட்டனர். இந்நிலையில், தற்போது காளி வெங்கட் ஹீரோவாக நடித்துள்ள மெட்ராஸ் மேட்னி படத்துக்கு ஒரு பாடலை வடிவேலு பாடி கொடுத்துள்ளார்.
வடிவேலு குரலில் வெளியான “எட்டணா இருந்தா எட்டூரும் எம்பாட்ட கேட்கும்”, “சந்தன மல்லிகையில்”, “ஊனம் ஊனம்” என பல பாடல்கள் செம ஹிட். அந்த வரிசையில் தற்போது ”என்னடா பொழப்பு இது” என்கிற பாடலை சினேகன் வரிகளில் பாடியுள்ளார். வரும் மே 19ம் தேதி மாலை 5 மணிக்கு முழுப்பாடலும் வெளியாகிறது.