US ல பார்க்குற படம் வேற.. இங்க வேற! மொத்தம் 8 மணி நேரம்..வெற்றிமாறன் சொன்ன குபீர் தகவல்

by Rohini |   ( Updated:2024-12-21 12:02:39  )
viduthalai2
X

viduthalai2

விடுதலை:

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வருடம் ரிலீசான திரைப்படம் விடுதலை. அதுவும் கடந்த வருடம் ரிலீசான திரைப்படங்களில் பெரும் வெற்றி பெற்ற திரைப்படமாகவும் இந்த விடுதலை திரைப்படம் அமைந்தது. இந்த படத்தில் சூரி கதையின் நாயகனாகவும் விஜய் சேதுபதி கேமியோ ரோலிலும் நடித்திருப்பார்கள்.

படம் இரண்டு பாகமாக வெளியானது. அதில் முதல் பாகம் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்தையும் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அந்த வகையில் நேற்று இந்த படத்தின் இரண்டாம் பாகம் திரையரங்குகளில் ரிலீசானது. இந்த படத்தில் விஜய் சேதுபதி படம் முழுக்க காட்டப்படுகிறார். அரசுக்கு எதிராக விஜய் சேதுபதி தன் மக்களை ஒன்று திரட்டி ஒரு இயக்கமாக அமைத்து செயல்பட காவல்துறை அவர்களுக்கு எதிராக சதி வேலைகளை தீட்ட இருதரப்பினருக்கும் இடையே நடக்கும் மோதல்தான் இந்த படத்தின் கதையாக இருக்கிறது.


எட்டுமணி நேரமா?:

இதில் சூரி போலீசாக நடித்திருக்கிறார். பெருமாள் வாத்தியாராக நடிக்கும் விஜய் சேதுபதி அந்த இயக்கத்தின் தலைவனாக இருக்க இயக்கத்தை பற்றி முழுவதும் சூரிக்கும் தெரியவர விஜய்சேதுபதியை ஒரு போலிஸாக இருந்து சூரி காட்டிக்கொடுக்கிறாரா என்பது கதை.

இதன் முதல் பாகத்தில் ஒரு எட்டு நிமிட காட்சி ரத்து செய்யப்பட்டது. இப்போது இரண்டாம் பாகத்தில் ஒரு மணி நேர காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக வெற்றிமாறன் சமீபத்திய பேட்டியில் கூறியிருக்கிறார். அதோடு இன்னொரு ஆச்சரியமான தகவலையும் தெரிவித்திருக்கிறார் வெற்றிமாறன்.

நான்கு பாகங்களாக விடுதலை:

அதாவது இரண்டு பாகங்களையும் சேர்த்து எட்டு மணி நேரமாக இருந்ததாம் இந்தப் படம். அதனால் 4 பாகங்களாக எடுத்திருக்கலாம். ஆனால் இது ஒரு ஃபெஸ்டிவ் திரைப்படமாக எடுக்க வேண்டியிருந்ததால் சில காட்சிகளை கட் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் அது எல்லாமே அப்படியேதான் இருக்கிறது.

ஓடிடியில் அதற்கான எடிட் செய்து ஒளிபரப்புகிறோம்.அதுமட்டுமல்ல அமெரிக்காவில் ரிலீஸான விடுதலை 2 படம் வேறு. இங்கு பார்க்கிற படம் வேறு. ஏனெனில் அமெரிக்காவில் முன்னதாகவே இந்த படம் அனுப்பப்பட்டதால் எந்த வித மாற்றமும் செய்ய முடியவில்லை என்று வெற்றிமாறன் கூறினார்.

Also Read: விஜயகாந்த் தன் மகனுக்காக செய்யத் தவறிய அந்த விஷயம்... எப்படி மிஸ் பண்ணினாரு?

Next Story