தமிழ்சினிமாவில் படையெடுக்கும் புதுப்புது வில்லன்கள்...நிலைத்து நிற்பார்களா?!

தமிழ்சினிமாவில் தற்போது வில்லன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். சொல்லப்போனால் அவர்களை வைத்துத் தான் கதையே நகர்கிறது. அவர்களது ஸ்டைல், மேனரிசத்தை ரசிகர்கள் கவனிக்கத் தொடங்கி விட்டார்கள். முன்பெல்லாம் இரட்டை வேடங்களில் கதாநாயகனே ஒருவர் வில்லனாகவும், ஒருவர் ஹீரோவாகவும் நடித்து கலக்குவார்கள். தற்போது வில்லனாக யார் யாரோ வருகிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் டிரெண்டிங் வில்லனாக வருவது தான் ஸ்பெஷல். இப்போதைய காலகட்டத்திற்கேற்ப இந்த வில்லன்கள் நிறைய டெக்னாலஜியைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களில் ஒரு சிலரைப் பற்றிப் பார்க்கலாம். […]

By :  sankaran v
Update: 2022-06-27 02:10 GMT

sardar

தமிழ்சினிமாவில் தற்போது வில்லன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். சொல்லப்போனால் அவர்களை வைத்துத் தான் கதையே நகர்கிறது. அவர்களது ஸ்டைல், மேனரிசத்தை ரசிகர்கள் கவனிக்கத் தொடங்கி விட்டார்கள்.

முன்பெல்லாம் இரட்டை வேடங்களில் கதாநாயகனே ஒருவர் வில்லனாகவும், ஒருவர் ஹீரோவாகவும் நடித்து கலக்குவார்கள்.

தற்போது வில்லனாக யார் யாரோ வருகிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் டிரெண்டிங் வில்லனாக வருவது தான் ஸ்பெஷல். இப்போதைய காலகட்டத்திற்கேற்ப இந்த வில்லன்கள் நிறைய டெக்னாலஜியைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களில் ஒரு சிலரைப் பற்றிப் பார்க்கலாம்.

மாறன்

Master mahendran

தனுஷ் நடித்து வரும் மாறன் படத்தில் மாஸ்டர் மகேந்திரன் தான் வில்லன். இந்தக்கதைக்கு அவர் தேவைப்படுவதால் அவரை வில்லனாக படம் முழுக்கக் கொண்டு வந்துள்ளார்கள்.

இந்தப்படத்தில் தனுஷ் இன்வஸ்டிகேட்டிங் ரிப்போர்டர். இந்த மர்மகொலையைக் கண்டுபிடிக்க விடாமல் தடுப்பவர் தான் மகேந்திரன்.

பத்து தல

பத்து தல படத்தில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடித்து வருகிறார்கள். இந்தப்படத்தில் வில்லனாக வருபவர் கௌதம் மேனன். இவர் இந்தப்படத்தில் போலீஸாக வருகிறார்.

அயலான்

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதன் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இந்தப்படத்தில் வில்லனாக வருபவர் சரத் கேல்கர். இவர் பாலிவுட்டில் கலக்குபவர். இஷாகோபிகர் வில்லி.

கோப்ரா

Irfan pathan

விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தான் வில்லன். நல்லவன் வேடத்தில் ஒரு கெட்டவன். விக்ரம் கெட்டவன் வேடத்தில் ஒரு நல்லவன். சினிமாவோட லாஜிக்கே இதுதானே...!

படம் வந்தால் தான் புதுசா என்ன பண்ணப் போறாருங்கறது தெரியும். அது தவிர விக்ரம் இந்தப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்தித்தில் கலக்கியுள்ளார்.

குருதி ஆட்டம்

அதர்வாவின் நடிப்பில் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெளிவர உள்ள படம் குருதி ஆட்டம். இந்தப்படத்தில் வில்லனாக வாட்;சன் சக்கரவர்த்தி அறிமுகமாகிறார்.

இவர் எங்கேயும் எப்போதும் என்ற படத்தில் பஸ் பயணியாக வந்து போவார். சமீபத்தில் வெளியான கைதி படத்தில் 4 கல்லூரி மாணவர்களில் ஒருவராக வந்தார். இவருடன் சேர்ந்து கண்ணா ரவி என்பவரும் வில்லனாக வருகிறார். மண்டேலா மற்றும் கைதி படத்தில் ஒரு ஒற்றர் கேரக்டரில் வந்துள்ளார்.

சர்தார்

சர்தார் படத்தில் கார்த்தி நடிக்க மித்ரன் இயக்குகிறார். இந்தப்படத்தில் வில்லனும் அவர் தான். ஒரு கார்த்திக் போலீஸ். இன்னொருவர் வில்லன். அவர் சர்தாராக இருக்கலாம் என்கின்றனர்.

Tags:    

Similar News