ஆடியோ ரிலீஸில் நம்ம பவர் தெரியணும்… ஆனா பீதியாவும் இருக்கே.. கலவரத்தில் இருக்கும் தளபதி கூடாரம்!
Leo Movie: விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி விரைவில் நடக்க இருக்கிறது. இதில் பெரிய பவரை காட்ட வேண்டும் என தளபதி நினைப்பதாகவும் அதற்கான சில வேலைகளும் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. தளபதி படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிக்கே இத்தனை சலசலப்பு நடந்தது என்றால் அது கண்டிப்பாக லியோவிற்காக மட்டும் தான் இருக்கும். மலேசியாவில் நடத்த அரங்குகள் தேடப்பட்டது. ஆனால் அங்கிருக்கும் அரங்குகள் எல்லாம் தேவைப்பட்ட தேதிகளில் புக […]
Leo Movie: விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி விரைவில் நடக்க இருக்கிறது. இதில் பெரிய பவரை காட்ட வேண்டும் என தளபதி நினைப்பதாகவும் அதற்கான சில வேலைகளும் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
தளபதி படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிக்கே இத்தனை சலசலப்பு நடந்தது என்றால் அது கண்டிப்பாக லியோவிற்காக மட்டும் தான் இருக்கும். மலேசியாவில் நடத்த அரங்குகள் தேடப்பட்டது. ஆனால் அங்கிருக்கும் அரங்குகள் எல்லாம் தேவைப்பட்ட தேதிகளில் புக செய்யப்பட்டு இருந்தது.
இதையும் வாசிங்க:இத கேட்க நீங்க யாரு… காரசாரமாக கத்திய இளையராஜா… விஷமமாக வேலை பார்த்த ரஜினிகாந்த்!
இதில் கடுப்பான டீம் தமிழ்நாட்டிலே மதுரை மாவட்டத்தில் வைக்க திட்டமிட்டது. ஆனால் அங்கிருக்கும் ரசிகர்கள் கோலாகலமாக நடத்தி விடுவார்கள். ஏற்கனவே அரசியல் எண்ட்ரி வேறு இருப்பதால் அவர்கள் எதுவும் சேட்டை செய்து விடுவார்கள். அதனால் உள்மாவட்டத்திலே வேண்டாம் என தளபதி கறார் காட்டி விட்டார்.
எப்போதும் போல சென்னையில் தான் நடத்த போறார்கள் என உறுதி செய்யப்பட்டது. ஆனால் இங்கும் ஒரு ட்விஸ்ட் வைக்கப்பட்டது. வாரிசு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி பெரிதாக கவனம் பெறவில்லை. இதனால் லியோ ஆடியோ ரிலீஸுக்கு 50000 பேரை அழைக்கலாம் என தளபதி ஆசைப்படுகிறார்.
இதையும் வாசிங்க:கிரஷ் யார் வேணாலும் இருக்கலாம்! ஆனா இவங்கள மாதிரி இருக்கமுடியுமா? விஷாலின் அடுத்த ப்ரபோசல்
ஆனால் நேரு அரங்கில் கண்டிப்பாக அத்தனை பேர் அமர முடியாது. அதே வேளையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரியில் 40 ஆயிரம் பேருக்கு பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. இதனால் என்ன செய்வது என்றே தெரியாத நிலைமையில் இருக்கிறதாம் தளபதி கூடாரம்.
பிரச்னையும் ஆக கூடாது. விழாவுல பவர் தெரியணும் என்ற ரீதியில் பல விஷயங்களை யோசித்து வருகின்றனராம். ரிலீஸே நெருங்கி விட்ட நிலையில் இன்னுமா டிஸ்கஷன் சீக்கிரம் ரிலீஸை முடிச்சு விடுங்க என்ற ரீதியில் பேச்சுக்களும் எழுந்து இருக்கிறது.