லோகேஷ் வேஸ்ட்!.. எல்லாமே எடிட்டர் மேஜிக்தான்!.. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே லியோ தயாரிப்பாளர்!..

லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் விஜய்சேதுபதியின் மகாராஜா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நிலையில், லியோ படம் குறித்தும் படத்தின் எடிட்டர் குறித்தும் பாராட்டி பேசியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. படத்தின் ரிலீஸுக்கு முன்பும் ரிலீஸ் ஆன பிறகும் எப்போதும் தயாரிப்பாளர்கள் ஹீரோ மற்றும் இயக்குனர்களின் துதியை மட்டுமே பாடுவார்கள். படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தினால் அந்த இருவருக்கும் தான் கார் முதல் காசோலை வரை கிடைக்கும். […]

By :  Saranya M
Update: 2023-09-10 10:29 GMT

லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் விஜய்சேதுபதியின் மகாராஜா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நிலையில், லியோ படம் குறித்தும் படத்தின் எடிட்டர் குறித்தும் பாராட்டி பேசியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

படத்தின் ரிலீஸுக்கு முன்பும் ரிலீஸ் ஆன பிறகும் எப்போதும் தயாரிப்பாளர்கள் ஹீரோ மற்றும் இயக்குனர்களின் துதியை மட்டுமே பாடுவார்கள். படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தினால் அந்த இருவருக்கும் தான் கார் முதல் காசோலை வரை கிடைக்கும்.

இதையும் படிங்க: இந்த லுக்கு வேறலெவல்!. விஜய் சேதுபதி 50வது பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!.

இந்நிலையில், லியோ படம் வெளியாவதற்கு முன்பே இயக்குனர் லோகேஷ் கனகராஜை மறந்து விட்டு படத்தின் எடிட்டர் பிலோமின் ராஜை தயாரிப்பாளர் பாராட்டியதும் அதற்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த ரியாக்‌ஷனையும் அந்த மேடையில் லலித் பேசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளை போலவே லியோ படத்திலும் லோகேஷ் கனகராஜ் சீன் வைத்துள்ளாரா என்றும் அந்த வருத்தத்தில் தான் லோகேஷ் கனகராஜை விட்டு விட்டு அந்த சிக்கலையே சரி செய்த எடிட்டர் பிலோமின் ராஜை திடீரென தயாரிப்பாளர் பாராட்டினாரா என சமூக வலைதளங்களில் பெரும் விவதாகமே ஓடிக் கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: அந்த இடத்துல ஒரு ஜிப்பு வைங்கடா!.. ஒப்பனா விட்டு விருந்து வைக்கும் தனுஷ் பட நடிகை!..

விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய லியோ பட தயாரிப்பாளர் லலித் குமார் தளபதியின் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் ஹாஃப் பார்த்து விட்டேன். பிலோ வேறலெவலில் மிரட்டியிருக்கீங்க என பாராட்டினேன். உடனே லோகேஷ் வந்து இந்த படத்தை இயக்கியதே நான் தான் சார் என்றார் என சிரித்துக் கொண்டே லோகேஷ் கனகராஜுக்கு மறைமுகமாக அப்பு வைத்து விட்டாரே என ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

மாஸ்டர் மற்றும் விக்ரம் படத்தின் இடைவேளை காட்சிகளில் இரண்டு இடங்களில் நடக்கும் சம்பவங்கள் பக்காவாக எடிட் செய்து காட்டப்பட்டு இருப்பதை போல லியோ படத்தின் இடைவேளை காட்சியிலும் வேறலெவல் வெறித்தனமான சீன் இருக்கும் நிலையில், எடிட்டர் தனது மொத்த வித்தையையும் அதில் இறக்கி உள்ளார் என்பதை பாராட்டவே லலித் அப்படி பேசினார் என விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Tags:    

Similar News