யுத்தத்தை விட ரத்தத்துக்குத்தான் அதிக பவர்! ஒரே நிமிஷத்துல தட்டி தூக்கிய லோகேஷ்! பரிதவிக்கும் ‘ரஜினி170’
Rajini170: இன்று இணையம் முழுவதும் பெரும் பேசு பொருளாக இருப்பது ரஜினி லோகேஷ் கூட்டணியை பற்றித்தான். லியோ படத்தை கூட கண்டுகொள்ளவில்லை. ரஜினியுடனான கூட்டணி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி விட்டது. விக்ரம் படத்தில் கமலை எந்த இடத்தில் லோகேஷ் உட்கார வைத்தாரோ அதே போல் ரஜினிக்கும் ஒரு வலுவான உயரத்தை கொடுப்பார் என்றே பார்க்கப்படுகிறது. அதுக்கும் மேலாக ரஜினியை வைத்து எப்படிப்பட்ட ஒரு மாஸான படத்தை கொடுக்கப் போகிறார் என்ற ஆவல் அனைவரின் மத்தியிலும் […]
Rajini170: இன்று இணையம் முழுவதும் பெரும் பேசு பொருளாக இருப்பது ரஜினி லோகேஷ் கூட்டணியை பற்றித்தான். லியோ படத்தை கூட கண்டுகொள்ளவில்லை. ரஜினியுடனான கூட்டணி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி விட்டது. விக்ரம் படத்தில் கமலை எந்த இடத்தில் லோகேஷ் உட்கார வைத்தாரோ அதே போல் ரஜினிக்கும் ஒரு வலுவான உயரத்தை கொடுப்பார் என்றே பார்க்கப்படுகிறது.
அதுக்கும் மேலாக ரஜினியை வைத்து எப்படிப்பட்ட ஒரு மாஸான படத்தை கொடுக்கப் போகிறார் என்ற ஆவல் அனைவரின் மத்தியிலும் எழுந்திருக்கிறது. 70 வயதை கடந்த ரஜினி ஜெய்லர் படத்தில் ஏதோ அங்கும் இங்குமாக காய்களை நகர்த்தி படத்தை ஓட்டி விட்டார். ஆனால் லோகேஷ் படத்தில் என்ன பண்ணப் போகிறார் என்ற தயக்கம் இருந்து வருகிறது.
இதையும் படிங்க: ஆடியோ ரிலீஸில் நம்ம பவர் தெரியணும்… ஆனா பீதியாவும் இருக்கே.. கலவரத்தில் இருக்கும் தளபதி கூடாரம்!
அதுவும் அன்பறிவு ஸ்டண்ட் மாஸ்டர்கள். அவர்களின் சமீபகால படங்களை பார்த்து வருகிறோம். அதனால் இதையெல்லாம் வைத்து ரஜினி171 படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகின்றது.
இதற்கிடையில் ரஜினி 170 படத்தை பற்றிய எந்தவொரு அப்டேட்டும் இல்லாமல் இருக்கின்றது. ஒரு திறமை மிகுந்த இயக்குனர். ஜெய்பீம் என்ற தரமான படத்தை கொடுத்தவர். அவர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்ததாகவே கருதப்படுகிறது.
இதையும் படிங்க: சூர்யாவுடன் நடிக்க தயக்கம் காட்டும் பொறுப்புள்ள நடிகர்! என்ன மக்கா பழச எல்லாம் மறந்துட்டீங்களா?
அதற்கு முக்கிய காரணம் லோகேஷ் தான் என்றும் சொல்லப்படுகிறது. இதிலிருந்தே மக்கள் எதிர்பார்ப்பது எது என்று புரிந்து விட்டது. சும்மா போர்க்கொடி தூக்கி நடந்து கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. வெட்டு ஒன்று துண்டு ஒன்று இருந்தால் தான் சரியாக இருக்கும் என்பதை மக்கள் நினைக்கிறார்கள்.
அதனால் தான் ரஜினி 171 பட அறிவிப்பு வந்ததில் இருந்தே ஞானவேல் , ரஜினி இணையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அறவே இல்லாமல் போய்விட்டது என்று கூறுகிறார்கள். மேலும் ரஜினி171 படத்தின் படப்பிடிப்பை பிப்ரவரி மாதத்தில் தொடங்க இருப்பதாக லோகேஷ் கூறியிருக்கிறாராம்.
இதையும் படிங்க: மீண்டும் பழைய ஃபார்ம்க்கு வரும் செல்வராகவன்… விட்ட இடத்தை பிடிப்பாரா?..